யாழ்ப்பாணத்தை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்: உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள (Hariharan Live in concert) நிகழ்ச்சிக்காக பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட குழுவினர் புதன்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக இப்படியொரு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில்,
குறித்த இசை நிகழ்ச்சிக்காக தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் அவரது குடும்பம், கலா மாஸ்டர் உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
இந்நிலையில் வியாழக்கிழமைநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பாலா, சாண்டி மாஸ்டர், ஸ்வேதா மோகன், மிர்ச்சி சிவா, பிரிய தர்ஷினி, ஆல்யா மானசா, சஞ்சீவ், மைனா நந்தினி, கிங்ஸ்லி, ரக்ஷிதா போன்றோர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். இவர்களை மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.