வெறித்தனமாக தயாராகும் நடிகர் ஆர்யா: ஸ்ருதிஹாசன்,லோகேஷ்கூட்டணி ! இன்றைய சினிமா

OruvanOruvan

Today cinema

நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கை!

நடிகர் விஷால் தனது மக்கள் பணிகளைக் குறித்தும் ரசிகர் மன்றத்தைக் குறித்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் எதிர்காலத்தில் தேவையேற்பட்டால் மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என கூறியுள்ளார்.

OruvanOruvan

Actor vishal

கவிஞர் சினேகன் மீது தொடுக்கப்பட்ட வழக்கு ரத்து

OruvanOruvan

lyricist snehan

நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி, கவிஞர் சினேகன் தனது சினேகம் அறக்கட்டளையின் மூலம் சமூக வலைத்தளத்தில் போலி கணக்குகள் தொடங்கி பணம் சம்பாதித்து வருவதாக சென்னை காவலர் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து தன் மீது அவதூறு பரப்பி வருவதாக சென்னை ஆணையர் அலுவலகத்தில் சினேகன் மேலும் ஒரு புகாரைக் கொடுத்துள்ளார்.

கவிஞர் சினேகன், மற்றும் ஜெயலட்சுமியை விசாரணைக்கு அழைத்த மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பொலிஸார் அவர்களை சமரசம் செய்து அனுப்பினர்.

ஆனால், கவிஞர் சினேகன் மீது நடிவடிக்கை எடுக்கக்கோரி, எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் ஜெயலட்சுமி. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சினேகன் மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென சினேகன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் நீதிபதி தமிழ்ச்செல்வி முன்னிலையில் விசாரணைக்கு வந்த வழக்கில் ஜெயலட்சுமி தன் மீது பொய் புகார் அளித்துள்ளார் என வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை ரத்து செய்தார்.

ஸ்ருதி ஹாசன் லோகேஷ்கூட்டணி

கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் புதிய புராஜெக்ட் ஒன்றில் ஸ்ருதி ஹாசனுடன், லோகேஷ் கனகராஜ் கை கோர்த்துள்ளார். லோகேஷ் கனகராஜூம், ஸ்ருதியும் சேர்ந்து இருக்கும் போஸ்டருடன் Inimel Delulu is the New Solulu என்று குழப்பான பதிவை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

மிஸ்டர்.எக்ஸ்

மிஸ்டர்.எக்ஸ் (MrX) படத்தின் அறிமுக காட்சிக்காக நடிகர் ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வரும் காணொளி இணையத்தில் பரவி வருகின்றது.

அவதார் 6 மற்றும் 7ம் பாகங்களை தயாரிக்க போகும் ஜேம்ஸ் கேம்ரூன்

51 வது சாட்டர்ன் விருது வழங்கும் விழாவில் அவதார் 6 மற்றும் 7ம் பாகத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் தெரிவித்துள்ளார். மேலும், இந்நிகழ்வில் சிறந்த இயக்குநர் உட்பட நான்கு விருதுகளை கேமரூன் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.