யாழ்ப்பாணம் வந்தார் பிரபல பாடகர் ஹரிஹரன்: முற்றவெளியில் தயாராகும் பிரம்மாண்ட இசைமேடை

OruvanOruvan

Hariharan Live in concert

ஹரிஹரன் இசை நிகழ்வுக்காக (Hariharan Live in concert) இந்திய பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட குழுவினர் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.

யாழ்.முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 09ம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.

NORTHERN UNIஇன் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வுக்காக பிரம்மாண்ட முறையில் முற்றவெளியில் மேடை தயாராகி வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் முதல் முறை இப்படி ஒரு பிரம்மாண்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இலங்கையர்கள்களுக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான நடிகை தமன்னா , ஐஸ்வர்யா ராஜேஷ் , யோகி பாபு , சாண்டி மாஸ்டர் , புகழ் , பாலா உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகை ரம்பா மற்றும் நடன இயக்குநர் கலா மாஸ்டர் ஆகியோர் நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்த நிலையில், இன்று பாடகர் ஹரிஹரன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.

முன்னதாக , டிசம்பர் மாதம் 21ம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் இசைநிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் தொடர்ந்த சீரற்ற காலநிலையால் நிறுத்தப்பட்டது.

ஹரிகரன் இசை நிகழ்வுக்காக இலங்கை வந்த ஹரிஹரன் மற்றும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலங்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதிலும் விமான சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் கடும் சிக்கல் எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.