’ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்'... இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் உயிரிழந்தார்: சோகத்தில் திரையுலகம்

OruvanOruvan

Music Composer Vijay Anand Passes Away

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த நான் அடிமை இல்லை படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் உடல்நலக்குறைவு காரணமாக தனது 71வது வயதில் உயிரிழந்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் ’நான் அடிமை இல்லை’, ‘நாணயம் இல்லாத நாணயம்’, 'காவலன் அவன் கோவலன்', 'ராசாத்தி வரும் நாள்', 'கயிறு' உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு விஜய் ஆனந்த் இசையமைத்தவர்.

’ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்' போன்ற பல ஹிட் பாடல்களை எண்பதுகளில் இசையமைத்துள்ளார். விசு இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இவர்தான் இசையமைப்பாளர்.

இன்று மாலை இறுதிச்சடங்கு

அவர் காலமான செய்தி திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினரும். ரசிகர்களும் தங்களது அஞ்சலியை செலுத்து வருகின்றனர்.

இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் இளையராஜாவின் மகள் பவதாரிணி புற்றுநோயால் உயிரிழந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் உயிரிழந்துள்ளது. இசைப்பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.