சக்கை போடு போடும் 'லால் சலாம்' ட்ரைலர்; இந்தியாவிற்கு கிராமி மழை பொழிகிறது: இன்றைய சினிமா

OruvanOruvan

Laal salaam

கிராமி மழை பொழிகிறது! ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து

இந்தியாவின் சக்தி ஆல்பத்திற்கு கிராமி விருது வழங்கப்பட்ட நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இந்தியாவிற்கு கிராமி மழை பொழிகிறது" என்று குறிப்பிட்டு விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'லால் சலாம்' ட்ரைலர் வெளியானது!

'லால் சலாம்' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இந்தத் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் வருகின்ற 09ஆம் திகதி வெளிவரவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

7ஆம் திகதி வெளியாகவுள்ள 'நந்த நந்தனா...' பாடல்

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'பேமிலி ஸ்டார்' திரைப்படத்தின்,'நந்த நந்தனா...' என்ற பாடல் வருகின்ற 7ஆம் திகதி வெளியாகும் என்பதை படக்குழு அறிவித்துள்ளது.

பேபி ஜானாக மாறும் தெறி!

கடந்த 2016ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் வெளியான 'தெறி' திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

ஹிந்தி ரீமேக் திரைப்படத்தின் டைட்டில் தற்போது டீஸருடன் வெளியிடப்பட்டிருக்கிறது. 'பேபி ஜான்' என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படம் வருகின்ற மே 31ஆம் திகதி ரிலீஸாகவுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். அட்லீ இந்தத் திரைப்படத்தை தயாரிக்கிறார்.