மகனால் அடித்துக் கொல்லப்பட்ட 'கடைசி விவசாயி' திரைப்பட நடிகை: சோகத்தில் திரையுலகினர்

OruvanOruvan

Kasamaal Death

'கடைசி விவசாயி' திரைப்பட நடிகை காசம்மாள் தனது மகனால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை மாவட்டம் ஆனையூரைச் சேர்ந்தவர் காசம்மாள். விவசாய கூலி தொழிலாளியான இவர், கடைசி விவசாயி திரைபடத்தில் நடித்திருந்தார்.

இவருக்கு நமக்கோடி, தனிக்கொடி என இரண்டு மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகன் நமக்கோடி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 15 வருடங்களாக தனது தாய் காசம்மாளுடன் வசித்து வந்துள்ளார்.

OruvanOruvan

Kasamaal Death

போதைக்கு அடிமையான நமக்கோடி அடிக்கடி காசம்மாளிடம் பணம் கேட்டு தகறாரில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் உறங்கிக்கொண்டிருந்த காசம்மாளை எழுப்பி அவரிடம் மது குடிக்க பணம் கேட்டு பிரச்சினை செய்துள்ளார் நமக்கோடி.

வாக்குவாதம் முற்றியதில் காசம்மாளை கட்டையால் தாக்கிவிட்டுச் சென்றுள்ளார் நமக்கோடி.

இதில் மோசமாக காயமடைந்த காசம்மாள் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நமக்கோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

OruvanOruvan

Kasamaal Death