மிரட்டும் ஷ்யாம்! லுங்கியுடன் ஓடும் விஜய் தேவரகொண்டா: இன்றைய சினிமா

OruvanOruvan

Today Cinema Update

அஸ்திரம்

நடிகர் ஷ்யாம் நடிக்கும் அஸ்திரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

OruvanOruvan

Asthram The Secret

ஃபேமிலி ஸ்டார்

'ஃபேமிலி ஸ்டார்' திரைப்படம் ஏப்ரல் 5ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. விஜய் தேவரகொண்டா லுங்கி அணிந்து, தோளில் சாக்குப்பையை மாட்டிக்கொண்டும், வாயில் ஆதார் அட்டையுடன் ஓடுவது போல ஒரு சாதாரண நடுத்தரக் கணவரின் வாழ்க்கையை கச்சிதமாக போஸ்டர் படம்பிடித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

OruvanOruvan

Family Star

லவ்வர்

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள 'லவ்வர்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இப்படம் பெப்ரவரி 9ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

லக்கி பாஸ்கர்

திரையுலகில் நுழைந்து துல்கர் சல்மான் 12 ஆண்டுகளை நிறைவு செய்யும் விதத்தை கொண்டாடும் நோக்கத்தில், அவர் நடித்து வரும் லக்கி பாஸ்கர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.