விஜயகாந்த் மகன் படத்தில் இணைந்த ராகவா லாரன்ஸ்: எகிறும் எதிர்பார்ப்பு

OruvanOruvan

Vijayakanth son shanmuga pandian

நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் என்ற படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்திற்காக அவர் மூன்று நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

தற்போது ராகவா லாரன்சின் கதாபாத்திரங்கள் இணைக்கும் பொருட்டு படத்தின் ஸ்கிரிப்டில் மாற்றங்களை இயக்குநர் அன்பு மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

விஜய், சூர்யா உள்ளிட்டவர்கள் முன்னேறிவந்த காலகட்டத்தில் அவர்களை தூக்கி நிறுத்திய பெருமை விஜயகாந்தினை சேரும்.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் விஜயகாந்த் மகனுக்காக சிறப்பு தோற்றத்தில நடிப்பது, அவரது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் விஜயகாந்த் ரசிகர்களிடையேயும் வரவேற்பை பெற்றுள்ளது.

சண்முக பாண்டியன் -ராகவா லாரன்ஸ் கூட்டணி எப்படிப்பட்ட வரவேற்பை கொடுக்கும் என்று பொருத்திருந்து பார்க்கலாம்.

மேலும், கடந்த 2015ம் ஆண்டிலேயே சகாப்தம் என்ற படத்தின்மூலம் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.

இதையடுத்து தமிழன் என்று சொல் என்ற படம் அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் திரில்லர் கதைக்களத்தில் படை வீரன் படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அன்பு இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே துவங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.