மரணிக்கவில்லை, உயிருடன் இருக்கிறேன்: மீண்டு வந்த பூனம் பாண்டே விளக்கம்

OruvanOruvan

Poonam Pandey

பிரபல இந்திய மொடல் நடிகையான பூனம் பாண்டே, "நான் மரணிக்கவில்லை, உயிருடன் இருக்கிறேன்" என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பூனம் பாண்டே நேற்று உயிரிழந்தாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ள அவர்,

நான் உயிருடன் இருக்கிறேன்.

பல உயிர்களை காவுகொண்ட கர்ப்பப்பை புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மேற்கண்ட போலிப் பிரச்சாரம் பரப்பப்பட்டது - என்று கூறியுள்ளார்.

எவ்வாறெனினும், பூனம் பாண்டே போலியான செய்திகளை பரப்பி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியதாக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.