அரசியலில் குதித்த அடுத்த நொடியே கட்சி பெயரில் சமூக வலைதள கணக்குகளை துவங்கிய விஜய்: மேள தாளத்துடன் வெடி வெடித்து கொண்டாடும் ரசிகர்கள்

OruvanOruvan

Thalapathy vijay opened Tamilaga Vettri Kazhagam x account page officially

தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்த கையுடன் TVK என்ற கட்சி பெயரில் நடிகர் விஜய் எக்ஸ் தளம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.

தளபதி விஜய் தொடங்கியுள்ள கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயரிடப்பட்டுள்ளது.

தன்னுடைய கட்சியை அதிகாரப்பூர்வமாக விஜய் அறிவித்துள்ள நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

மேலும் விஜய்யின் அரசியல் அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

தற்போது நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக தெலுங்கு தயாரிப்பாளருடன் ஒரு படத்தில் விஜய் நடிக்கிறார் என சில தகவல் பரவியது. எனினும் அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கப்பெறவில்லை. இந்த படங்களை முடித்த கையுடன் முழு நேர அரசியல் களத்தில் குதிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.