சிம்புவுக்கு தரமான ட்ரீட் கொடுத்த ராஜ்கமல்: இன்றைய சினிமா

OruvanOruvan

STR48

எஸ்டிஆர் 48

ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள 'எஸ்டிஆர் 48' படத்தின் மிரட்டலான போஸ்டருடன் நடிகர் சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை ராஜ்கமல் வெளியிட்டுள்ளது. சற்று முன் வெளியான இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது.

OruvanOruvan

STR48

ஓடிடி தளத்தில் 'கேப்டன் மில்லர்'

தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் பெப்ரவரி 9ஆம் திகதியன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

'சைரன்' திரைப்படம்

ஜெயம்ரவியின் 'சைரன்' திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

'எஸ்டிஆர்48' புதிய அறிவிப்பு இன்று வெளியாகும்

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு அவரது 48ஆவது திரைப்படத்தில் நடிக்கப்போகும் செய்தி அண்மையில் வெளியாகியது.

இந்நிலையில் எஸ்டிஆர்.48 படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.