'கடவுளுக்கு கோரிக்கை..', 'ஹார்ட் பீட்...' பாடல்கள் வெளியாகின: இன்றைய சினிமா
'டெவில்'
'டெவில்' திரைப்படத்தின் 'கடவுளுக்கு கோரிக்கை...' என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
மிஷ்கின் எழுதியுள்ள இந்தப் பாடலை பிரியங்கா பாடியுள்ளார்.
விதார்த், பூர்ணா, ஆதித் அருண் உள்ளிட்டோர் நடித்துள்ள டெவில் திரைப்படம் நாளை (பெப்ரவரி 02) வெளியாகவுள்ளது.
'லால் சலாம்' திரைப்படத்தின் 'ஏ புள்ள...' பாடலின் மேக்கிங் வீடியோ
'லால் சலாம்' திரைப்படத்தின் 'ஏ புள்ள...' பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க, விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த ஏ புள்ள பாடலை கபிலன் எழுத, சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.
ஹொட்ஸ்டார் வெளியிட்டுள்ள 'ஹார்ட் பீட் பாட்டு...'
'ஹார்ட் பீட்' எனும் சீரிஸிலிருந்து 'ஹார்ட் பீட் பாட்டு...' எனும் பாடலை வௌியிட்டுள்ளது டிஸ்னி + ஹொட்ஸ்டார் தளம்.
சூப்பர் சுப்பு எழுதி, மேட்லி ப்ளூஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடலானது 'ஹார்ட் பீட்' சீரிஸின் மையக் கருத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்த சீரிஸை தீபக் சுந்தர்ராஜன் இயக்க, A Tele Factory நிறுவனம் தயாரிக்கிறது.