பால் சொம்புடன் விஜய் ஆண்டனி; சரக்கு பாட்டிலுடன் மிருணாளினி: ரிகர்சலில் உருகி உருகி பாடும் சித் ஸ்ரீராம் ; இன்றைய சினிமா

OruvanOruvan

Today Cinema

வெளியானது 'எஸ்.டி.ஆர். 48' திரைப்படத்தின் புது அப்டேட்

'எஸ்.டி.ஆர்.48' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வருகின்ற பெப்ரவரி 2ஆம் திகதி வெளியாகவுள்ளதை ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.

சிம்புவின் 48ஆவது திரைப்படமான இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் சேர்ந்து தயாரிக்கின்றனர்.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் இந்தாண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

'போர் தீருமா...' பாடலின் வரிகளை உள்ளடக்கிய வீடியோ வெளியானது

'பர்த் மார்க்' திரைப்படத்தின் 'போர் தீருமா...' பாடலின் வரிகளை உள்ளடக்கிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்ஸிங் ரோஸாக நடித்து புகழ்பெற்ற ஷபீர் கல்லராக்கல் கதாநாயகனாக நடிக்க,அவருக்கு ஜோடியாக மிர்னா நடிக்கிறார்.

தி கோட் லைஃப்

பிரபல இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கும் தி கோட் லைஃப் படம் ஏப்ரல் 10ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக போஸ்டரை வெளியிட்டு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் அறிவித்துள்ளார். பிரபல எழுத்தாளர் பென்யாமின் எழுதிய, மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான ஆடுஜீவிதம் நாவலை மையமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டிருப்பதால் நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

OruvanOruvan

The Goat Life

ரிகர்சலில் உருகி உருகி பாடும் சித் ஸ்ரீராம்

“சைரன்” படத்தில் தாமரை வரிகளில் உருவாகியுள்ள நேற்று வரை என்ற பாடலின் ரிகர்சலில், பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் உருகி உருகி பாட, ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

ரோமியோ

படம் வெளியாகும் முன்பே சம்மர் பிளாக்பஸ்டர் என்கிற அறிவிப்புடன் நடிகர் விஜய் ஆண்டனியின் ரோமியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. பால் செம்புடன் விஜய் ஆண்டனியும் சரக்கு பாட்டிலுடன் மிருணாளினியும் இருக்கும் போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றது.

இளையராஜாவை நேரில் சந்தித்த கமல்

மகளை இழந்து வாடும் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

பவதாரிணி உயிரிழந்தது இளையராஜா வாழ்க்கையில் ஆற்ற முடியாத சோகம்; நிரப்ப முடியாத வெற்றிடம் என்றே திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது. இந்நிலையில், இளையராஜாவை உலகாநயகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கையுடன் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.