வெறித்தனமாக தயாராகும் நடிகர் ஆர்யா! ஹொலிவூட் ஹீரோ லுக்கில் நடிகர் சூரி: தெறிக்கவிட்ட புளூ ஸ்டார்! இன்றைய சினிமா

OruvanOruvan

Today's cinema

ஹொலிவூட் ஹீரோ லுக்கில் நடிகர் சூரி

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை 1' மற்றும் இரண்டாம் பாகம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்படவுள்ளதுடன், இந்நிகழ்வில், கலந்து கொள்ள நடிகர் சூரி ஹொலிவூட் ஹீரோ லுக்கில் நெதர்லாந்து சென்றுள்ளார்.

வெறித்தனமாக தயாராகும் நடிகர் ஆர்யா

'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகத்திற்காக நடிகர் ஆர்யா சென்னை எம்.எம்.ஏ பயிற்சி வகுப்பிற்கு சென்று அங்கு பாக்சிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

வெற்றி கொண்டாட்டத்தில் தெறிக்கவிட்ட புளூ ஸ்டார்

'புளூ ஸ்டார்' திரைப்படத்தின் வெற்றியை இயக்குநர் எஸ்.ஜெயகுமார், தயாரிப்பாளர் பா.இரஞ்சித், பாடகர் அறிவு மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை நீலம் தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

காதலனின் புரொபோசலை ஏற்றுக்கொண்ட எமிஜாக்சன்

நடிகர் எட்வெஸ்ட் விக் நடிகை எமிஜாக்சனிடம் மோதிரம் கொடுத்து புரொபோஸ் செய்த நிலையில், அவரது புரொபோஸை எமிஜாக்சன் ஏற்றுக்கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் இந்த ஜோடிக்கு திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கார்த்தி 27

கார்த்தி 27 படப்பிடிப்பு தளத்தில் எடுத்த செல்ப்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

OruvanOruvan

புளூ ஸ்டார்

புளூ ஸ்டார் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சி ஒன்றின் உருவாக்கத்தை நடிகர் அசோக் செல்வன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, "நம்ம ஊரு இசை.. ஏதோ ஒன்னு பண்ணுது! " என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.