விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படங்கள்: ஒரு பார்வை

OruvanOruvan

Sports based movies

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் வெறுமனே உறவுகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து படங்கள் வெளிவராமல், விளையாட்டுக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்கள் வெளியாகின.

அப்படிப்பட்ட படங்களின் தொகுப்பை பார்ப்போம்.

கில்லி

OruvanOruvan

Ghilli movie

2004ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பிரபலமான திரைப்படம் கில்லி. இத் திரைப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

எம்.குமரன் s/o மகாலக்ஷ்மி

OruvanOruvan

M.Kumaran s/o mahaluxmi movie

கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எம்.குமரன் s/o மகாலக்ஷ்மி. இந்தத் திரைப்படம் குத்துச்சண்டையை அடித்தளமாக வைத்து எடுக்கப்பட்டது.

சென்னை 600028

OruvanOruvan

chennai 600028 movie

ஒரு திரைப்பட்டாளமே நடித்து கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சென்னை 600028. கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு வெளியான திரைப்படம். நகைச்சுவை கலந்த இந்தத் திரைப்படம் இன்று வரையில் பிரபலம்தான்.

எதிர்நீச்சல்

OruvanOruvan

Edhirneechal movie

2013ஆம் வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் எதிர்நீச்சல். இந்தத் திரைப்படம் மாரத்தன் ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஜீவா

OruvanOruvan

Jeeva movie

2014ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜீவா. இந்தத் திரைப்படம் கிரிக்கெட்டை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இதுவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இறுதிச்சுற்று

OruvanOruvan

Irudhisutru movie

2016ஆம் ஆண்டு மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான திரைப்படம் இறுதிச்சுற்று. இது குத்துச் சண்டை விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந்தத் திரைப்படம் அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கனா

OruvanOruvan

Kanaa movie

2018ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கனா. இந்தத் திரைப்படம் பெண்களுக்கான கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

பிகில்

OruvanOruvan

Bigil movie

2019ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் பிகில். இந்தத் திரைப்படம் பெண்கள் கால்பந்து அணியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்தத் திரைப்படம் அனைத்து பெண்களுக்கும் தன்னம்பிக்கையை கொடுத்தது எனலாம்.