நடிகர் விஜய்க்கு விவாகரத்தா?: அடுத்தக்கட்டத்திற்கு ஆழம் பார்க்கும் தளபதி

OruvanOruvan

Vijay & Sangeetha Divorce

25 ஆண்டுகள் சங்கீதாவுடன் வாழ்ந்து வந்த நடிகர் விஜய் தற்போது மனைவியை பிரிந்துவிட்டதாக செய்திகள் உலாவி வருகின்றது.

நடிகர் விஜய் தன் ரசிகையான சங்கீதா சொர்ணலிங்கத்தை கடந்த 1999ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 25ம் திகதி திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் உள்ளனர்.

மகன் ஜேசன் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். அனுபவம் பெற்ற பிறகு தந்தையை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது தான் அவரின் ஆசை.

மகள் திவ்யா கல்வியை தொடர வெளிநாடு சென்றுள்ளார். இந்நிலையில் விஜய் விவாகரத்து பற்றிய சர்ச்சைகள் இணைய ஊடகங்களை வட்டமிட்ட வண்ணம் உள்ளது.

தொடரும் விவாகர்த்து சர்ச்சை

விஜய்யும், சங்கீதாவும் கோலிவுட் கொண்டாடும் ஜோடிகளில் ஒன்று. இந்நிலையில் விஜய்யை சங்கீதா விவாகரத்து செய்துவிட்டார். விஜய்யை விட்டுப் பிரிந்து லண்டனில் தன் பெற்றோருடன் சங்கீதா வசித்து வருகிறார் .

அதனால் தான் விஜய் அண்மைய காலமான நிகழ்ச்சிகளுக்கு தனியாக வந்தார் என சமூக ஊடகங்களில் கிசுகிசுக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan

Vijay Divorce

விஜய்யின் விவாகரத்து சர்ச்சை இன்று ஆரம்பித்தது இல்லை, பல வருடங்களாக தொடர்கின்றது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக விஜய் – கீர்த்தி சுரேஷ் காதல் என்றும் அதனால், சங்கீதா தனிமையில் வாழ்வதாகவும் கூறப்பட்டது.

எனினும், அது உண்மை இல்லை என்பது போல நடிகர் விஜய் வெளிநாட்டி மகள் மற்றும் மனைவி சங்கிதாவுடன் இருக்கும் காணொளிகள் வெளியாகியது.

அரசியலுக்கு வர ஆழம் பார்க்கும் விஜய்

காதல், விவாகரத்து என்று சர்ச்சைகள் தொடர்ந்தாலும் விஜய் அரசியலுக்கு வர ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதற்கான வேலைகளில் அவரே களத்தில் இறங்கி விட்டார்.

இந்த நிலையில் மீண்டும் சங்கீதாவை நடிகர் விஜய் விவாகர்த்து செய்திருப்பதால் இணையத்தில் தகவல் பரவியுள்ளது.

சினிமாவை பொறுத்த வரை கிசுகிசுக்கள் எழுவது சகஜமான ஒன்று தான்.

நடிகர் விஜய் விவாகரத்து தொடர்பில் மௌனம் காத்து வருவதால் ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளனர். மிக விரைவில் குடும்பத்தினருடன் புகைப்படம் வெளியிட்டு பலரது கேள்விகளுக்கு விடை கொடுப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.