வயிற்றில் குழந்தையுடன் மலாசனா செய்த அமலாபால்: இவ்வளவு நன்மைகளா? வைரலாகும் வீடியோ

OruvanOruvan

Amala Paul

உடலையும், மனதையும், புத்துணர்ச்சியுடன் இளமையாக வைத்திருக்க நடிகை அமலாபால் கர்ப்பமான காலத்தில் மலசானா யோகா செய்திருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

நடிகை அமலாபால் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நிலையில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட அமலாபால் தனது கணவர் தேசாய் உடன் தண்ணீரில் மிதக்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் கர்ப்பமான காலத்தில் மலசானா என்ற யோகா செய்திருக்கும் வீடியோவை இணையாத்தினை ஆக்கிரமித்துள்ளது.

அதிசயம் செய்யும் மலாசனா யோகா

உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலானோர் இன்று யோகா செய்வதை வழக்கமாகி உள்ளனர்.

முறையாக யோகா செய்வதினால் உடல் நலத்தை தக்க வைத்து மரணத்தை கூட தள்ளிப் போடலாம்.

யோகாசனத்தில் உள்ள பல்வேறு ஆசனங்கள்,பல நோய்களை கட்டுப்படுத்தி வரும் நிலையில், மலாசனா எனும் ஆசனம்,மலச்சிக்கலை கட்டுப்படுத்த உதவுகிறது. மலச்சிக்கலை எளிதில் போக்க நமது முன்னோர்கள் கையாண்டு வந்த எளிய உடற்பயிற்சிகளில் இதுவும் ஒன்று.

இன்று பலரும் அவதிப்படும் முக்கிய நோய்களுள் மலச்சிக்கலும் ஒன்றாகும்.

அதாவது, "மாலா" என்றால் "மாலை" என சமஸ்கிருதத்தில் பொருள்படும். எனவே, மாலை போன்ற நிலையில் உட்கார்ந்து இதை செய்ய வேண்டும். தற்போது இந்த மலாசனத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

OruvanOruvan

Amala Paul

செய்முறை

முதலில் காலை தோள்பட்டை அளவிற்கு விரித்து வைத்து கொள்ளவும். அடுத்து பாதி உட்காரும் நிலைக்கு மூச்சை வெளியேற்றிக்கொண்டே அமர வேண்டும்.

அதன் பின்னர் கைகளை குவித்து, கைககளின் மூட்டுகள், கால்களின் மூட்டுகளை விலக்கும் வண்ணம் அமர்ந்து பார்வை மேல்நோக்கி இருக்க, கைககள் வணக்கம் வைக்க வேண்டும்.

சுருக்கமாக சொல்ல போனால் பாதி உட்கார்ந்து மலம் கழிக்கும் நிலையில் இருந்து கொண்டு இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.

இந்த ஆசனத்தில் 30 முதல் 60 நொடிகள் வரை இருக்கவும்.இந்நிலையில் ஆழ்ந்த சுவாசங்கள் எடுக்க வேண்டும்.

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் எலும்பு சார்ந்த பிரச்சினைகள் கண்டிப்பாக ஏற்படாது.

தொடைகள் மலக்குடலை நன்கு அழுத்துவதால் மலக்குடல் நன்கு வேலை செய்யும்.

உங்களின் நடு முதுகு மிகவும் பலமாக இருக்கும். மேலும், கழுத்து வலி, இடுப்பு வலி போன்றவற்றால் அவதிப்படுவோருக்கு இது சிறந்த தீர்வாகும்.

குழந்தை பேறு காலத்தில் உதவும் மலசானா

உட்கார்ந்து கொண்டு இந்த மலாசனாவை செய்யும்போது, உங்கள் வயிற்று தசைகள் பகுதியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

இதன்மூலம், பெருங்குடலில் தேங்கியுள்ள கழிவுகள், மலமாக உடலை விட்டு வெளியேறுகிறது.

மலாசனா ஆசனம், உடல் சமநிலை, செறிவு மற்றும் கவனத்தை மேம்படுத்துகிறது.

இடுப்புப்பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துவதால், திருப்தியான உடலுறவுக்கு தேவையான சக்தி கிடைக்க வழிவகுக்கிறது.

கர்ப்பிணிகளுக்கு, இந்த ஆசனம், குழந்தை பேறு காலத்தில், எவ்வித சிரமமும் இல்லாமல் குழந்தை பிறக்க உதவுகிறது.