நம்மைப்போல நெஞ்சம்கொண்ட அண்ணன் தம்பி யாருமில்லை...: அண்ணன் - தம்பி பாசத்தை வெளிக்கொணர்ந்த படங்கள்

OruvanOruvan

Brother bond movies

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு சில படங்களைப் பார்க்கும்போது “அடடா....நமக்கும் இப்படியொரு குடும்பம் இருக்கலாமே...நமக்கும் நமக்கும் இப்படி நண்பர்கள் இருந்திருக்கலாமே...” என யோசிக்கத் தோன்றும்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த அண்ணன் - தம்பி உறவை மையப்படுத்திய திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்.

தர்மத்தின் தலைவன்

OruvanOruvan

Dharmathin thalaivan

1988ஆம் ஆண்டில் ரஜினிகாந்த், பிரபு நடிப்பில் வெளியான திரைப்படம் தர்மத்தின் தலைவன். அண்ணன் தம்பி உறவு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு எடுத்துக்காட்டு எனலாம்.

வானத்தைப்போல

OruvanOruvan

Vaanathaipola

கடந்த 2000 ஆண்டில் விஜய்காந்த், பிரபுதேவா, லிவிங்ஸ்டன் நடிப்பில் வெளியான திரைப்படம் வானத்தைப்போல. இந்தத் திரைப்படம் இன்று வரையில் அனைவரதும் விருப்பப் பட்டியலில் உள்ளது.

ஆனந்தம்

OruvanOruvan

Aanandham

ஆனந்தம் திரைப்படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தத் திரைப்படத்தில் மம்முட்டி, முரளி, அப்பாஸ், சியாம் கணேஷ் ஆகியோர் அண்ணன் தம்பிகளாக நடித்திருந்தனர்.

மாஞ்சா வேலு

OruvanOruvan

Maanjavelu

2010ஆம் ஆண்டு அருண்விஜய், கார்த்திக் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஞ்சா வேலு. இந்தத் திரைப்படத்தில் அருண் விஜய் மற்றும் கார்த்திக்கின் வித்தியாசமான கதாபாத்திரத்தை பார்க்கலாம்.