”விஜய் என் கண்ணுக்கு முன்னாடி வளர்ந்த பையன்”: காக்கா கழுகு கதை எல்லாம் வேண்டாம் ; சர்ச்சைக்கு ரஜினிகாந்த் பதில்

OruvanOruvan

Lal Salam Audio Launch

"எனக்கும் விஜய்க்கும் எந்த போட்டியும் இல்லை, அப்படி எல்லாம் சொல்லாதீங்க மனசு கஷ்டமாக இருக்கு” என லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காக்கா - கழுகு சர்ச்சைக்கு பதில் கொடுத்துள்ளார்.

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சொன்ன காக்கா - கழுகு கதை மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

நடிகர் விஜய்யை தான் ரஜினிகாந்த் காக்கா என சொல்கிறார் என கடும் விவாத பொருளாக மாறிய நிலையில், லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய்யும் காக்கா கழுகு பற்றி தனது குட்டி ஸ்டோரியில் பேசும் அளவுக்கு அந்த சர்ச்சை பெரிதாக வெடித்தது.

இந்நிலையில், லால் சலாம் படத்தின் இசை வெளியிட்டு விழாவில், நடிகர் விஜய் பற்றி ரஜினிகாந்த் பேசியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் எனக்கு போட்டி இல்லை

நீண்ட நேரம் தெளிவாக சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் பற்றி ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

"ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் சொன்ன அந்த காக்கா கழுகு கதையை அப்படியே வேற மாதிரி.. நான் விஜய்க்கு சொன்ன மாதிரி இணையத்தில் பேசப்பட்டது. அது நிஜமாக எனக்கு வருத்தமா இருப்பதாகவும் கூறினார்.

காக்கா கழுகு கதை எல்லாம் வேண்டாம்!

விஜய் என் கண்ணுக்கு முன்னாடி வளர்ந்த பையன், தர்மத்தின் தலைவன் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் விஜய்க்கு 13 வயசு இருக்கும்.

படப்பிடிப்பு முடிந்த உடனே சந்திரசேகர் என்கிட்ட அழைத்து வந்து என்னோட பையன், நடிப்பில் ஆர்வம் இருப்பதாக சொன்னாரு.. நான் உடனே படிக்க சொல்லுங்க.. படிச்சிட்டு வந்து நடிக்கலாம்னு அறிவுரை கூறினேன்.

அதன் பிறகு நடிகராக வந்த விஜய் இன்று வளர்ந்து தன்னுடைய கடினமான உழைப்பால் இந்த இடத்துக்கு வந்து நிற்கிறார். அடுத்த அரசியலுக்கு செல்ல உள்ளார். இதில் எனக்கும் விஜய்க்கும் போட்டின்னு சொல்றதெல்லாம் கஷ்டமா இருக்கு, விஜய் எனக்கு போட்டின்னு சொன்னா எனக்கு மரியாதை இல்லை, எனக்கு கௌரவம் இல்லை.

அதேபோல அவருக்கும் அது மரியாதை இல்லை. காக்கா கழுகு கதை எல்லாம் வேண்டாம்.. இது என் அன்பான வேண்டுகோள் ரொம்ப நன்றி என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் அனைத்துக்கும் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இது குறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.