மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது: தமிழர்கள் வென்றுள்ள விருதுகளின் விபரங்கள்

OruvanOruvan

Vijaykant honoured with Padma Bhushan

கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் பத்ம விருதுகள் இந்திய குடியரசுத் தலைவர் தலைமையில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்த வருடத்திற்கு 132 பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

OruvanOruvan

Vijaykant honoured with Padma Bhushan

விருதுகள் வென்றுள்ள தமிழர்கள்

பத்ம விபூஷண் வென்ற தமிழர்கள்

  1. வைஜெயந்திமாலா பாலி - கலைத்துறை

  2. பத்மா சுப்ரமண்யம் - கலைத்துறை

பத்ம பூஷன் விருது

  1. மறைந்த நடிகர் விஜயகாந்த் - கலைத்துறை

பத்மஸ்ரீ விருதுகள்

  1. பத்திரப்பன் - கலைத்துறை

  2. ஜோஷ்னா சின்னப்பா - விளையாட்டு

  3. ஜோ டி குரூஸ் - இலக்கியம் மற்றும் கல்வி

  4. ஜி நாச்சியார் - மருத்துவம்

  5. சேசம்பட்டி டி சிவலிங்கம் - கலைத்துறை

மேலும், மறைந்த நடிகர் விஜயகாந்த் உள்பட காலம்சென்ற 9 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 8 பேருக்கு பத்ம விருதுகள் கிடைத்துள்ளதுடன், பத்ம விருது பெற்றவர்களில் 30 பேர் பெண்கள் மற்றும் பிற நாடுகளை 8 பேர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.