இலங்கையில் இருந்து சகோதரியின் உடலை சென்னைக்கு கொண்டுவந்த யுவன்: கலங்கி நிற்கும் குடும்பத்தினர்

OruvanOruvan

Musician's Ilaiyaraaja daughter's body

பாடகி பவதாரிணி உடல் கொழும்பில் இருந்து சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பவதாரிணி உடலுடன் யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு உள்ளனர். விமான நிலைய விதிமுறைகள் முடிந்தவுடன் உறவினர்களிடம் பவதாரிணி உடலை ஒப்படைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும், சென்னை, தியாகராயநகரில் உள்ள இளையராஜா வீட்டில் பவதாரிணி உடல் பொது மக்கள் மற்றும் திரை உலகினர் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சகோதரியின் உடலை காணவந்த யுவன் சங்கர் ராஜா! இந்தியாவிற்கு எடுத்து செல்லப்படும் இசைஞானி மகளின் உடல் (காணொளி)

இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணியின் உடல் வைக்கப்பட்டுள்ள கொழும்பு - பொரளை ஜெயரட்ன மலர்சாலைக்கு அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா சற்றுமுன் வருகை தந்தார்.

தற்போது பவதாரணியின் உடல் இந்தியாவிற்கு எடுத்து செல்வதற்கு தாயர் நிலையில் உள்ளதுடன், இன்று மதியம் 1.30க்கு உடல் விமானநிலையத்தின் மூலம் சென்னைக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளது.

மேலும், கல்லீரல் புற்றுநோய்க்கு கடந்த ஆறு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி, இலங்கையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

Musician's Ilaiyaraaja daughter's body taken to India

OruvanOruvan

Musician's Ilaiyaraaja daughter's body taken to India

OruvanOruvan

Musician's Ilaiyaraaja daughter's body taken to India