விருதை தட்டி தூக்குமா இந்திய வம்சாவளியின் ஆவணப்படம்: எதிர்பார்ப்பை எகிற வைத்த ஒஸ்கர் விருது இறுதி பரிந்துரை பட்டியல்

OruvanOruvan

Oscar nominations 2024

96வது ஒஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் மாதம் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.

இதையொட்டி ஒஸ்கர் பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது.

கோல்டன் குளோம் விருதுகளில் அதிக விருதுகளை பெற்ற ஓபன்ஹெய்மர் மற்றும் பார்பி உள்ளிட்ட படங்களே இந்த ஒஸ்கர் விருது பரிந்துரை பட்டியலிலும் அதிகமான இடங்களை பிடித்துள்ளன.

ஓபன்ஹெய்மர் படம் சிறந்த திரைப்படம், சிறந்த நாயகன், சிறந்த நடிகை, சிறந்த துணை கதாபாத்திரம் உள்ளிட்ட 13 பிரிவுகளில் ஒஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனிடையே சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை போன்ற பிரிவுகளில் ஒஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது.

OruvanOruvan

Oscar nominations 2024

ஒஸ்கர் பரிந்துரை பட்டியல்

கடந்த ஜனவரி 8ம் திகதி நடைபெற்ற 81வது கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் ஓபன்ஹெய்மர், கில்லர்ஸ் ஆப் தி ப்ளவர் மூன், பார்பி, புவர் திங்ஸ் உள்ளிட்ட படங்கள் ஏராளமான விருதுகளை தட்டிச் சென்றன. கிறிஸ்டோபர் நோலன், கிலியன் மர்பி, எம்மா ஸ்டோன், லில்லி கிளாட்ஸ்டோன் உள்ளிட்டோர் விருதுகளை வென்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒஸ்கர் பரிந்துரை பட்டியலிலும் இவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

சிறந்த திரைப்படங்களுக்கான பரிந்துரை பட்டியல்

சிறந்த திரைப்படங்களுக்கான பரிந்துரை பட்டியலில் அமெரிக்கன் ஃபிக்சன், அனாடமி ஆஃப் ஃபால், பார்பி, தி ஹோல்டோவர்ஸ், கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன், மாஸ்ட்ரோ, ஓபன்ஹெய்மர், பாஸ்ட் லைவ்ஸ், புவர் திங்ஸ், தி சோன் ஆஃப் இன்டரஸ்ட் ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே இந்த ஆண்டில் சிறந்த படம் கேட்டகரியில் 3 பெண் இயக்குநர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

OruvanOruvan

Oscar nominations 2024

ஆவணப்படம்

இந்த பரிந்துரை பட்டியலில் ஓபன்ஹெய்மர் 13 விருதுகளுக்கும் புவர் திங்ஸ் படம் 11 விருதுகளுக்கும் கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன் படம் 10 விருதுகளுக்கும் பார்பி 8 விருதுகளுக்கும் மேஸ்ட்ரோ 7 விருதுகளுக்கும் தேர்வாகியுள்ளன.

இந்திய வம்சாவளியை சேர்ந்த இயக்குநர் நிஷா பஹுஜாவின் To kill a Tiger என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்பட பிரிவில் இடம்பெற்றுள்ளது.

கனடா நாட்டு தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படம் ஜார்கண்டை சேர்ந்த இந்திய விவசாயியின் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த முறை The elephant whisperers ஆவணப்படம் ஒஸ்கர் வென்ற நிலையில் இந்தப் படம் ஒஸ்கர் வெல்லுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.