போடு டப்பாசு.. தக் லைஃப் படக்குழுவின் மரண மாஸ் சர்ப்ரைஸ்: ஒருவனின் இன்றைய சினிமா

OruvanOruvan

Thuglife shoot Begins

வெளியான "போர்” திரைப்படத்தின் புதிய போஸ்டர்

இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில், இருமொழிப் படமாக உருவாகியுள்ள "போர்” திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

OruvanOruvan

Por

ஏழு பாடல்களுக்கு தந்தையான டி.இமான்- பார்த்திபன் வாழ்த்து

பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் டி. இமானுக்கு இயக்குநர் பார்த்திபன் "பிறந்த ஏழு பாடல்களுக்கும் தந்தையான டி.இமான் அவர்களுக்கு நன்றி. பின்னணி இசையிலும் தூள் கிளப்ப வாழ்த்துகள்" என்று தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து வாழ்த்து கூறியுள்ளார்.

OruvanOruvan

D Imman

விஜய் ஆண்டனியின் 'ஹிட்லர்' பட டப்பாசு பாடல் நாளை வெளிவரவுள்ளது

இயக்குநர் தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'ஹிட்லர்' திரைப்படத்தின் 'டப்பாசு...' பாடல் நாளை வெளியாகவுள்ளதை போஸ்டர் ஒன்றின் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

OruvanOruvan

Hitler movie poster

தக் லைஃப் படப்பிடிப்பு ஆரம்பம்

நடிகர் கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும்'தக் லைஃப்' (Thug Life) திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

எமர்ஜென்சி திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

'எமர்ஜென்சி' திரைப்படம் வருகிற ஜூன் 14ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக நடிகை கங்கனா தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.