சாய் பல்லவி வீட்டில் சத்தமில்லாமல் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்: அழகு தேவதையாய் ஜொலித்த தங்கை

OruvanOruvan

Sai Pallavi dances at sister Pooja Kannan's engagement

நடிகை சாய் பல்லவியின் தங்கையான பூஜா கண்ணனின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தினை ஆக்கிரமித்துள்ளது.

'பிரேமம்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த நடிகை சாய் பல்லவி தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார்.

அத்துடன் இவரின் தங்கையான பூஜா கண்ணனும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

'சித்திரை செவ்வானம்' என்ற படத்தில் சமுத்திரக்கனியின் மகளாக நடித்து பூஜா திரையுலகில் அறிமுகம் ஆனார்.

முதல் படத்திலே இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்த நிலையில், அக்காவை போல நாயகியாக சினிமாவில் வளம் வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

எனினும், ஒரே படத்துடன் திரையுலகில் இருந்து ஒதுங்கினார். அண்மையில் தனது வருங்கால கணவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் நேற்றைய தினம் வினீத் - பூஜா கண்ணனுக்கு சத்தமே இல்லாமல் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

பூஜா கண்ணனும் தனது கை நிறைய மருதாணியுடன் அக்கா சாய் பல்லவியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

இந்த ஜோடிக்கு பலரும் சமூக வலைத்தளம் வாயிலாக வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

OruvanOruvan

Sai Pallavi dances at sister Pooja Kannan's engagement

OruvanOruvan

Sai Pallavi dances at sister Pooja Kannan's engagement

OruvanOruvan

Sai Pallavi dances at sister Pooja Kannan's engagement