மிரளவைத்த கதாநாயகன் - வில்லன் ஜோடிகள்: புகைப்படங்கள் ஒரு பார்வை

OruvanOruvan

Negative Roles

சினிமாவைப் பொறுத்தவரை கதாநாயகனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ அதேயளவு முக்கியத்துவம் வில்லன்களுக்கும் உள்ளது. சினிமா வரலாற்றைப் பொறுத்தவரையில் சிவாஜி - நம்பியார், ரஜினிகாந்த் - ரகுவரன், விஜய் - பிரகாஷ்ராஜ் இப்படி கதாநாயகன், வில்லன்களுக்குமான தொடர்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்றைப் பெற்றது.

அந்த வகையில் பட்டிதொட்டி எங்கும் வைரலான கதாநாயகன் - வில்லன்/வில்லி ஜோடிகளை இப்போது பார்ப்போம்.

எம்.ஜி.ஆர் - நம்பியார்

எம்.ஜி.ஆர் - நம்பியார் கூட்டணி பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். திரையில் கதாநாயகனாக எம்.ஜி.ஆரை எந்தளவுக்கு ரசித்தோமோ அதேயளவுக்கு நம்பியாரின் வில்லத்தனத்தையும் ரசிக்கும் கூட்டம் அநேகர் உள்ளனர்.

OruvanOruvan

Mgr - Nambiyaar

ரஜினிகாந்த் - ரகுவரன்

கடந்த 1995ஆம் ஆண்டு கேங்ஸ்டர் ஆக்ஷன் திரைப்பமாக வெளிவந்தது பாட்ஷா திரைப்படம். இந்த திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரகுவரனுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள், அதற்கு போடப்பட்ட இசை என்பன இன்று வரையில் பிரபல்யமானது.

OruvanOruvan

Rajinikanth - Raguvaran

ரஜினிகாந்த் - ரம்யா கிருஷ்ணன்

1999ஆம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்தத் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னால் உள்ள காரணிகளுள் ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். அவரது வில்லி கதாபாத்திரமும் ரஜினியின் கதாபாத்திரமும் பட்டிதொட்டியெங்கும் ட்ரெண்டானது.

OruvanOruvan

Rajinikanth - Ramyakrishnan

ரஜினிகாந்த் - சுமன்

2007ஆம் ஆண்டில் வெளியான சிவாஜி திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக சுமன் நடித்திருந்திருந்தார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் இடையில் நடக்கும் காட்சிகள் பார்ப்பதற்கு அருமையாக இருக்கும்.

OruvanOruvan

Rajinikanth - Suman

விஜய் - பிரகாஷ்ராஜ்

விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவிந்த திரைப்படம் கில்லி. இதில் வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார். வில்லன் என்பதையும் தாண்டி இந்த படத்தில் பிரகாஷ் ராஜின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.

OruvanOruvan

Vijay - Prakashraj

தனுஷ் - பிரகாஷ்ராஜ்

கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திருவிளையாடல் ஆரம்பம். இந்த திரைப்படத்தில் கதாநாயகனான தனுஷூம் வில்லனான பிரகாஷ்ராஜூம் எலியும் பூனையுமாக சண்டை போடும் காட்சிகள் அருமை.

OruvanOruvan

Dhanush - Prakashraj

சூர்யா - அசீஷ் வித்யார்த்தி

சூர்யா நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆறு. இதில் ஆசிஷ் வித்யார்த்தி வில்லனாக நடித்திருப்பார். இறுதியில் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் நடைபெறும் சண்டை மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்திருக்கும்.

OruvanOruvan

Surya - Ashish vidyarthi

சிம்பு - ரீமா சென்

கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான வல்லவன் திரைப்படத்தில் வில்லியாக ரீமா சென் நடித்திருந்தார். இதில் கதாநாயகனுக்கு சரிசமமான ஒரு நடிப்பைக் கொடுத்திருப்பார் ரீமா சென்.

OruvanOruvan

Simbu - Reema sen

அனுஷ்கா - சோனு சூட்

2009ஆம் ஆண்டு அனுஷ்கா நடிப்பில் வெளியாகிய பிரம்மாண்டமான திரைப்படம் அருந்ததி. இதில் எந்தளவுக்கு அனுஷ்காவின் நடிப்பை ரசித்தோமோ அந்தளவுக்கு வில்லன் சோனு சூட்டின் கதாபாத்திரத்தை பார்த்து மிரண்டிருப்போம்.

OruvanOruvan

Anushka - Sonu soot

அஜித் - அருண் விஜய்

2015ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக அருண் விஜய் நடித்திருந்தார். சாதுவான கதாநாயகனாக நடித்திருந்தவர் திடீரென வில்லனாக நடித்தார். அவரது நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.

OruvanOruvan

Ajithkumar - Arun vijay

விஷால் - ஸ்ரீயா ரெட்டி

விஷால் நடிப்பில் 2006ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திமிரு. இதில் தனது கதாபாத்திரத்துக்கு எந்தளவுக்கு உயிர் கொடுக்க முடியுமோ அந்தளவுக்கு நடித்திருப்பார் ஸ்ரீயா ரெட்டி. இதில் இவர் கூறிய வசனங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்

OruvanOruvan

Sriya reddy