விடாமுயற்சி திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்: படக்குழு வெளியிட்ட அறிவிப்பு

OruvanOruvan

VidaaMuyarchi OTT Release Update

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் தயாரிப்பில் உருவாகிவரும்" விடாமுயற்சி" திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளின் உரிமத்தை அந்நிறுவனம் பெற்றிருப்பதாகவும், திரையரங்கத்தில் படம் வெளியான பிறகு நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மிக விரைவில் ட்ரைலர் குறித்த அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.