இன்று மாலை வெளியாகும் யோகிபாபுவின் தூக்குதுரை ட்ரைலர்: படக்குழு அறிவிப்பு

OruvanOruvan

Thookudurai

'தூக்குதுரை' திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் தனது சமூக வலைதளத்தில் காணொளி ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் 'தூக்குதுரை' திரைப்படத்தில், இனியா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.