23 வருடங்கள் கழித்து மீண்டும் ரீ-ரிலீஸாகும் அஜித்தின் தீனா: படக்குழு பகிர்ந்த புதிய போஸ்டர்

OruvanOruvan

Dheena Re Release Soon

நடிகர் அஜித்குமார் நடித்த தீனா படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

கடந்த 2001ல் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 'தீனா' படத்தில் அஜித் குமார், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் இளைஞர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றது.

இந்த படத்தின் மூலம் அஜித்திற்கு 'தல' என்கிற பட்டம் பிரபலமானது. ரசிகர்களிடம் அப்போது வரவேற்பை பெற்ற இந்த படம் கிட்டத்தட்ட 23 வருடங்கள் கழித்து மீண்டும் ரீ-ரிலீஸாகிறது.

தீனா படம் ரீ மாஸ்டர் டிஜிட்டல் வெர்சன் செய்யப்பட்டு விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.

OruvanOruvan

Dheena Re Release Soon