வெளியானது கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா டீசர்: நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை

OruvanOruvan

Raghuthatha

ரகு தாத்தா திரைப்படத்தின் டீசரை நடிகை கீர்த்தி சுரேஷ், "கயல்விழியின் அட்டகாசமான நகைச்சுவை பயணத்தை காண தயாராகுங்கள். ரகு தாத்தா விரைவில் உங்கள் அருகில் உள்ள திரையரங்குகளில்..." என டீசரை வெளியிட்டுள்ளார்.

முழுக்க முழுக்க இந்தி மொழி திணிப்புக்கு எதிராக உருவாகியுள்ள இந்த டீசரில், நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. "இந்தி எக்ஸாம் எழுதினா தான் ப்ரொமோஷன் கிடைக்கும்னா எனக்கு ப்ரொமோஷனே வேண்டாம்" என கீர்த்தி சுரேஷ் பேசிய வசனம் வைரலாகி வருகிறது.

அதேபோல், திணிக்காதே திணிக்காதே இந்தியை திணிக்காதே... இந்தி தெரியாது போயா என்ற வசனங்களையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றன.

ரகு தாத்தா படம் முழுக்க இந்தி மொழி திணிப்புக்கு எதிரான சம்பவங்கள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.