மகா நடிகை லட்சுமி பிறந்தநாள் இன்று: சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் லட்சுமியின் மைல்கல்.

OruvanOruvan

Actress Lakshmi

கதாநாயகி, அம்மா, பாட்டி என எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும், அதில் கச்சிதமாக பொருந்துவார் என்றால் அது நடிகை லட்சுமி தான்.

இன்று லட்சுமியின் 71வது பிறந்தநாள் ஆகும்.

குமாரி ருக்மணி என்ற நடிகைக்கும், ஏரகுடிப்பட்டி வரதராவ் என்ற இயக்குனருக்கும் பிறந்தவர் லட்சுமி.

சினிமா பின்னணி கொண்டதால் என்னவோ சிறு வயதிலேயே நடிப்பின் மீது காதல் கொண்ட லட்சுமி 1961ம் ஆண்டு இயக்குனர் டி.என்.ராமண்ணா இயக்கிய ஸ்ரீவள்ளி படத்தில் லட்சுமி நடித்தார்.

OruvanOruvan

Actress Lakshmi

அப்போது முதலே அவர் பரபரப்பான நடிகையானார்.

சில நேரங்களில் சில மனிதர்கள், சம்சாரம் அது மின்சாரம், திக்கற்ற பார்வதி, ஜீன்ஸ், பாசப்பறவைகள் போன்றவை லட்சுமி நடிப்பில் உச்சம் தொட்ட சில படங்களாகும்.

மிகவும் திறமையான நடிகையான லட்சுமி தேசிய விருது, 3 நந்தி விருதுகள், பிலிம் பேர் விருதுகள் போன்ற பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரராக உள்ளார்.

OruvanOruvan

Actress Lakshmi