மறைந்த நடிகர் மனோபாலா பிறந்த தினம் இன்று: மனோபாலா 200க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருந்தார்.

OruvanOruvan

Manobala

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், யூடிபர் என பன்முகத்தன்மை கொண்ட மனோபாலாவுக்கு இன்று பிறந்த நாள் ஆகும்.

தமிழ் திரையுலகில் இயக்குனராகும் ஆசையில் இருந்த அவர் நடிகர் கமல்ஹாசனின் பரிந்துரையால் 1979ஆம் ஆண்டு ’புதியவார்புகள்’ படத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.

மனோபாலா பிள்ளைநிலா, தூரத்துப் பச்சை, ஊர்க்காவலன், மல்லுவேட்டி மைனர், நைனா போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.

OruvanOruvan

Manobala

இயக்குநர் என்பதோடு தன்னை குறுக்கி கொள்ளாமல் குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் சிறப்பாக நடித்து வந்தார்.

அதன்படி மனோபாலா 200க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருந்தார்.

69 வயதான மனோபாலா கல்லீரல் பிரச்சனையால் கடந்த மே மாதம் 3ம் திகதி உயிரிழந்தார்.