மீண்டும் வெளியாகும் சூர்யாவின் அயன் ; மகிழ்ச்சியில் ரசிகர்கள்: 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியான இந்த படம் அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

OruvanOruvan

Ayan Re-release in Telugu

நடிகர் சூர்யா நடித்த அயன் படம் தெலுங்கில் ரிலீஸ் ஆக உள்ளது.

ஏற்கனவே கெவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த வாரணம் ஆயிரம் படம் சமீபத்தில் தெலுங்கில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியான இந்த படம் அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

பல தியேட்டர்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாகவும் ஓடியது.

அதன் காரணமாகவே கே.வி .ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - தமன்னா நடித்த அயன் படத்தையும் தெலுங்கில் ரீ-ரிலீஸ் செய்ய அப்படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அயன் படத்தின் தெலுங்கு போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.