ரெட் கார்டு தூக்கியதற்காக பிரதீப்பிடம் மன்னிப்பு கேட்ட ஐஷு! வைரலாகும் பதிவு: என்னை நம்பியவர்களை நான் ஏமாற்றிவிட்டேன். அந்த வீட்டில் காதல், நட்பு என்று சில விஷயங்கள் எனது கண்களை மறைத்துவிட்டது. தவறு செய்தது நான்.
ரெட் கார்டு தூக்கியதற்காக பிரதீப்பிடம் மன்னிப்பு கேட்டு ஐஷு பதிவிட்ட கருத்து இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட ஐஷு, பிக்பாஸ் குறித்தும், அந்த வீட்டுக்குள் நடந்த விவகாரம் குறித்தும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், “ரசிகர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
என்னை நம்பியவர்களை நான் ஏமாற்றிவிட்டேன். அந்த வீட்டில் காதல், நட்பு என்று சில விஷயங்கள் எனது கண்களை மறைத்துவிட்டது. தவறு செய்தது நான்.
என்னை என்ன வேண்டுமென்றாலும் சொல்லுங்கள். எனது குடும்பத்தை விட்டுவிடுங்கள்.
நான் எனது குடும்பத்துக்கே அவமானம். எனது உயிரை விடவும் முடிவெடுத்துவிட்டேன்.
ஆனால் என் மீது பெற்றோர் வைத்திருக்கும் கடைசி நம்பிக்கைக்காகத்தான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்.
நான் தவறான விஷயங்களை செய்தபோது அதிலிருது காப்பாற்ற முயன்ற யுகேந்திரன், விசித்திரா, அர்ச்சனா, மணி, பிரதீப் ஆகியோரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.
குறிப்பாக ரெட் கார்டு தூக்கியதற்காக பிரதீப்பிடமும் நான் எனது மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். நான் அவருக்கு துரோகம் செய்யவில்லை என்று உருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார்.