ஒரு துணை வேண்டும் என நினைக்கிறேன்! 48 வயதில் திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை நக்மா: எனக்குத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற எண்ணமில்லை - நக்மா.

OruvanOruvan

Nagma

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் கடந்த 1994ல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'காதலன்'.

இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நக்மா.

பின்னர் பாட்ஷா, ரகசிய போலீஸ், வில்லாதி வில்லன், தீனா, சிட்டிசன் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் போஜ்புரி மொழியில் அறிமுகமாகி அங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். 2008ம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார் நக்மா.

OruvanOruvan

Nagma

48 வயதான நக்மா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஆனால், அவரது தங்கைகளான ஜோதிகா, ரோஷினி ஆகியோர் திருமணம் செய்து கொண்டு தங்கள் இல்லற வாழ்க்கையை அமைத்து கொண்டனர்.

இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பற்றி அண்மைய பேட்டியில் நக்மா கூறுகையில், “எனக்குத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற எண்ணமில்லை.

வேறு வார்த்தைகளில் கூறு வேண்டுமென்றால் எனக்கும் ஒரு துணை, குழந்தைகள் வேண்டும் என்று நினைக்கிறேன்.

என் திருமணம் விரைவில் நடக்குமா என்று பார்ப்போம். திருமணம் செய்து கொண்டால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்” என கூறியுள்ளார்.