உயிர் மற்றும் உலகத்துடன்! குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி: குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் மற்றும் உலக் தெய்வக் என பெயர் வைத்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி.
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா - விக்னேஷ் சிவன் தங்கள் இரட்டைக்குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் நடைபெற்றது.
வாடகை தாய் மூலம் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது.
குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் மற்றும் உலக் தெய்வக் என பெயர் வைக்கப்பட்டதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று தங்கள் இரட்டைக் குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடும் க்யூட்டான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், என் உயிர் & உலகத்துடன் முதல் ஓணம் என பதிவிட்டுள்ளார்.