மீண்டும் உடல் எடையை அதிகப்படுத்தும் நடிகர் சிம்பு: கதாநாயகன் மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறாராம்.

OruvanOruvan

Silambarasan Photo Credit: Google

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிலம்பரசன் என்கிற சிம்பு.

இவரின் 48வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார்.

கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

தற்போது இந்த படத்தில் நடிக்க நடிகர், நடிகை தேர்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்கிறார்கள்.

கதாநாயகன் மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறாராம்.

இதற்காக எடையை குறைத்துள்ள சிம்பு மீண்டும் எடையை அதிகப்படுத்தி நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.