’லியோ’ திரைப்படத்தில் விஜய்யுடன் இணையும் தனுஷ்? இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே: லியோ படத்தில் முக்கியமான சிறப்பு தோற்றத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

OruvanOruvan

Dhanush and Vijay Photo Credit: Google

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

விரைவில் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற இருக்கின்றது.

பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் லியோ திரைப்படம் குறித்து தற்போது வெளியான ஒரு தகவல் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது லியோ படத்தில் முக்கியமான கேமியோ ரோலில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

’விக்ரம்’ திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் எப்படி சூர்யா நடித்தாரோ அதே போல லியோ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.