எட்டு மாதங்களின் பின்னர் அமெரிக்க டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி: கொள்முதல் விலை 300 ரூபாவிற்கு கீழ் குறைந்தது

OruvanOruvan

US Dollar

இலங்கை மத்திய வங்கி இன்று (19) வெளியிட்ட நாளாந்த நாணய மாற்று வீத அட்டவணையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 299.29 ரூபாவாகவும் விற்பனை விலை 308.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜூலை ஐந்தாம் திகதிக்கு பின்னர் டொலரின் கொள்வனவு விலை 300 ரூபாய்க்கும் குறைவாகக் குறைவது இதுவே முதல் முறை ஆகும்.

அதன்படி, இன்று பல முக்கிய வர்த்தக வங்கிகளின் நாணய மாற்று விகிதங்களின் படி, டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் பின்வரும் வகையில் பதிவாகியுள்ளன.

  • மக்கள் வங்கி – கொள்முதல் விலை 298.36 ரூபா, விற்பனை விலை 308.47 ரூபா.

  • கொமர்சியல் வங்கி - கொள்முதல் விலை 298.67 ரூபா, விற்பனை விலை 308.00 ரூபா.

  • ஹட்டன் நேஷனல் வங்கி (HNB) – கொள்முதல் விலை 300.00 ரூபா, விற்பனை விலை 308.00 ரூபா.

  • செலான் வங்கி – கொள்முதல் விலை 297.90 ரூபா, விற்பனை விலை 307.40 ரூபா.

  • DFCC (DFCC) – கொள்முதல் விலை 297.75 ரூபா, விற்பனை விலை 309.75 ரூபா.

  • என்.டி.பி. (NDB) – கொள்முதல் விலை 296.75 ரூபா, விற்பனை விலை 307.75 ரூபா.

  • அமானா வங்கி - கொள்முதல் விலை 301.25 ரூபா, விற்பனை விலை 306.75 ரூபா.

  • இலங்கை வங்கி – கொள்முதல் விலை 300.50 ரூபா, விற்பனை விலை 3078.50 ரூபா.