ஏலத்துக்கு வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்: 2022 இல் 163 பில்லியன் ரூபா இழப்பு

OruvanOruvan

Sri Lanka airline

இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அடுத்த வாரம் ஏலம் விடப்பட உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

மார்ச் 5 ஆம் திகதி நேரடி ஏலத்தை தொடர்ந்து புதிய முதலீட்டாளர் தேர்வு செய்யப்படுவார் என்றும் அமைச்சர் கூறினார்.

குறைந்தது 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்து, விமான நிறுவனத்தில் பணிபுரியும் 6,000 பேருக்கு வேலை பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடியருக்கு ஏலத்தின் போது முன்னுரிமை அளிக்கப்படும் - என்றும் அவர் கூறினார்.

ஏலத்துக்கான பின்னணி

2.9 பில்லியன் டொலர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களால் ஏற்படும் நஷ்டத்தைக் குறைக்க தீவு நாடு எதிர்பார்க்கும் நிலையில், அரச நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கான ஏலங்களை இலங்கை அழைத்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு குறைந்த கையிருப்பு காரணமாக ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது,

இது பணவீக்கம் மற்றும் நாணயத் தேய்மானத்திற்கு வழிவகுத்தது.

இலங்கையின் மிகப்பெரும் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களில் ஒன்றான விமான நிறுவனம், கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலாத்துறையின் வீழ்ச்சியுடன் அண்மைய ஆண்டுகளில் போராடி வருகிறது.

2022 இல் 163.58 பில்லியன் ரூபா நஷ்டத்தை

பணப்பற்றாக்குறையில் உள்ள இலங்கையின் தேசிய விமான சேவையானது 525 மில்லியன் டொலர் வருடாந்திர இழப்பை கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தது.

2022 மார்ச் வரையிலான ஆண்டில் விமான சேவை 163.58 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொண்டதாக ஒரு அறிக்கையில் கூறியது.

தெற்காசிய தீவின் சர்வதேச நாணய நிதியத்தின் 3 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்பிற்கு இலங்கைக்கு மறுசீரமைப்பு தேவைப்படுகிறது.

அந்த மறுசீரமைப்புக்கு அமைவாக தனியார்மயமாக்குவதற்கான நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸும் அடங்கும்.

OruvanOruvan

Sri Lanka airline

2008 ஆம் ஆண்டு முதல் தொடர் நஷ்டம்

இலங்கையின் பொருளாதார நெருக்கடி பல மாதங்களாக உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்தியது, அதன் உச்சக்கட்டத்தில் ஆவேசமான மக்கள் அரசாங்க கட்டிடங்களை தாக்கி முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை வெளியேற்றியது.

அரச வருவாயை உயர்த்த முயற்சிக்க, அரசாங்கம் வருமான வரிகளை இரட்டிப்பாக்கியுள்ளது, மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது மற்றும் எரிபொருள் மானியங்களை நீக்கியுள்ளது.

ராஜபக்ஷ குடும்பம் 2008 ஆம் ஆண்டு லண்டன் சென்று திரும்பியதில் இருந்து, ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் Times of India வர்ணித்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனம் 56 நாடுகளில் 111 இடங்களுக்கு அதன் உலகளாவிய பாதை வலையமைப்பில் ஏர்பஸ் விமானங்களை இயக்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.