மார்ச் முதல் எரிபொருள் குறைவடையும் சாத்தியம்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி

OruvanOruvan

fuel prices sri lanka

மாதாந்திர எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைவாக மார்ச் முதலாம் திகதி எரிபொருள் விலையானது திருத்தி அமைக்கப்படவுள்ளது.

அந்த திருத்தத்துக்கு அமைவாக, எதிர்வரும் முதலாம் திகதி முதல் எரிபொருள் விலையானது குறைவடைவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் தகவல்கள் என்பனவும் எரிபொருள் விலை குறைக்கப்படலாம் என்பதை வெளிக்காட்டுகின்றது.

மின்சக்தி - எரிசக்தி அமைச்சின் தகவல்

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பூஜ்ஜியத்திலிருந்து 4 சதவீதம் வரையான ஈவுத்தொகையைக் குறைப்பதன் மூலம் செலவுகளை மட்டுமே ஈடுசெய்யும் வகையில் விலை சூத்திரத்தை செயல்படுத்த நாங்கள் எதிர்ப்பார்த்துள்ளோம்.

பெட்ரோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் ஆகியவற்றுடன் போட்டியிட அந்த 4 சதவீதத்தை பயன்படுத்த முயற்சிக்கிறோம்.

இத்தனை காலமாக எமக்கு இருந்த 4 சதவீதத்தை வைத்து, கடந்த ஆண்டு விலைச்சூத்திரத்தின் ஊடாக பழைய கடன்களையும், வங்கிகளில் வாங்கிய கடன்களையும் ஈடுகட்ட முடிந்தது.

இதன் பயனை மக்களுக்கு வழங்குவதற்காக எதிர்காலத்தில் துரிதமாக செயற்படுவோம் என நம்புகின்றோம் என்றும் அவர் கூறினார்.

OruvanOruvan

Kanchana Wijesekera

ரூபாவின் பெறுமதி உயர்வு

இவ் வருடத்தின் ஆரம்பம் முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக இன்று செவ்வாய்க்கிழமை (27) அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக ரூபாவின் கொள்முதல் பெறுமதியானது 306.06 ரூபாவாக காணப்படுகிறது.

அதேநேரம், ரூபாவின் விற்பனை பெறுமதியானது 315.72 ரூபாவாக காணப்படுகிறது.

OruvanOruvan

Today’s CBSL official exchange rates

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி

கடந்த சில வாரங்களாக சர்வதேச சந்தையில் உயர்வடைந்த நிலையில் காணப்பட்ட மசகு எண்ணெயின் விலையானது நேற்று திங்கட்கிழமை முதல் சரிவினை சந்தித்துள்ளது.

மத்திய கிழக்கில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தத்தின் சமிக்ஞைகள் வெளிப்பட்டுள்ள நிலையில் எண்ணெய் விலை இந்த வாரம் குறைவடைந்துள்ளது.

ப்ரெண்ட் மசகு எண்ணெய் 0923 GMT க்குள் 10 சென்ட்கள் அல்லது 0.12% சரிந்து ஒரு பீப்பாய் 82.24 அமெரிக்க டொலர்களாக பதிவானது.

அதே நேரத்தில் யு.எஸ். மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் (WTI) ஒரு பீப்பாய்க்கு 7 சென்ட்கள் அல்லது 0.09% குறைந்து 77.32 டொலர்களாக பதிவானது.

OruvanOruvan

Oil prices

ஜோ பைடனின் அறிவிப்பு

ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்து வரும் காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் நடத்திய தாக்குதல்கள் சரக்குக் கட்டணங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து நேரத்தை அதிகரித்துள்ளன.

எவ்வாறாயினும், மோதலில் தீவிரம் குறைவதற்கான அறிகுறியாக, முஸ்லிம்களின் புனித மாதமான ரமழானுக்காக காசாவில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செவ்வாயன்று கூறினார்.

எனவே, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் தகவல்கள் என்பனவும் அடுத்த மாதம் முதல் இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படலாம் என்பதை வெளிக்காட்டுகின்றது.

OruvanOruvan

U.S. President Biden

எனவே, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் தகவல்கள் என்பனவும் அடுத்த மாதம் முதல் இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படலாம் என்பதை வெளிக்காட்டுகின்றது.