இலங்கை விமான நிலையங்களின் நிர்வாகம் அதானி குழுமத்திற்கு: அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது

OruvanOruvan

Srilankan Airlines

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் உட்பட இலங்கையில் உள்ள விமான நிலையங்களின் நிர்வாகம் தொடர்பாக இந்தியாவின் அதானி குழுமம்,இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் உள்ள 03 விமான நிலையங்களின் நிர்வாகத்தை பெற்றுக்கொள்வது தொடர்பாக இந்த கலந்துரையாடியுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு இரத்மலானை விமான நிலையம் மற்றும் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் என்பவற்றின் நிர்வாகங்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமான நிலையங்களின் வசதிகளை விரிவுபடுத்துவது மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

அதானி குழுமம்,மும்பை சர்வதேச விமான நிலையம் உட்பட இந்தியாவில் உள்ள 7 விமான நிலையங்களின் நிர்வாக விவகாரங்களை கையாண்டு வருகிறது.