உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்: மேலும் அதிகரித்த ரூபாவின் பெறுமதி

OruvanOruvan

Dollar rate in Sri Lanka today

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 310.54 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 320.40 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நேற்று புதன்கிழமை அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 312.09 ரூபாவாகவும், 321.85 ரூபாவாகவும் காணப்பட்டது.

வங்கிகளில் டொலர் நிலவரம்

இதேவ‍ேளை, இலங்கையில் உள்ள முக்கிய வர்த்தக வங்கிகளிலும் இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது.

மக்கள் வங்கி: நேற்றைய தினம் 310.88 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 308. 18 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

விற்பனை பெறுமதியும் 321.71 ரூபாவிலிருந்து 318.92 ரூபாவாக குறைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி: நேற்றைய தினம் 10.46 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 307.99 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

விற்பனை பெறுமதியும் 320.50 ரூபாவிலிருந்து 318.00 ரூபாவாக குறைந்துள்ளது.

சம்பத் வங்கி: நேற்றைய தினம் 312 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 309.5 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

விற்பனை பெறுமதியும் 321 ரூபாவிலிருந்து 318.5 ரூபாவாக குறைந்துள்ளது.

OruvanOruvan

Today’s CBSL exchange rates