பல நகரங்களுக்கான சேவையை நிறுத்திய 'ஓமன் ஏர்': கொழும்புக்கான போக்குவரத்தும் முடக்கம்

OruvanOruvan

Oman Air

ஓமான் அரசுக்கு சொந்தமான 'ஓமன் ஏர்' அதன் தற்போதைய திட்டத்தின் ஒரு பகுதியாக சில தெற்காசிய நகரங்களுக்கான விமான சேவையினை இரத்து செய்துள்ளது.

இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த நிதி செயல்திறனை மேம்படுத்துவதையும், வளர்ந்து வரும் போட்டி சந்தையில் தனது நிலையை வலுப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டாது என விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிய திட்டத்தின்படி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர், இலங்கையின் கொழும்பு மற்றும் பங்களாதேஷில் உள்ள சிட்டகாங் ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்கள் இரத்து செய்யப்படும்.

எவ்வாறெனினும், விமான நிறுவனம் பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டிற்கு ஒரு புதிய சேவையை ஆரம்பிக்கும்.

மற்றும் இந்தியாவில் லக்னோ, உத்தரபிரதேசம் மற்றும் கேரளாவின் திருவானந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கான மேலதிக விமான சேவையையும் குறித்த நிறுவனம் ஆரம்பிக்கும்.

இது தவிர மேலும் பல பகுதிகளுக்கும் சேவையினை விஸ்தரிக்க ஓமன் ஏர் திட்டமிட்டுள்ளது.