Nixon, Author at Oruvan.com

அரசாங்கத்தின் ஊடகத் தேசிய கொள்கையில் குறைபாடுகள் – ஏற்க முடியாதென்கிறது யாழ். ஊடக அமையம்
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில், ஊடகத்துறையில் ஊடகவியலாளர்கள் தங்கள் அறிவை மேம்படுத்தி ஊடகத் தொழிலுக்கு ஏற்ற முறையில் வலுச் சேர்க்கும் நோக்கில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கியுள்ள ஊடகத் தேசிய கொள்கையை ஏற்க முடியாது என யாழ் ஊடக அமையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று புதன்கிழமை ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய ஊடகக் கொள்கையில் உள்ள குறைபாடுகள் மற்றும் பிரதான ஊடக அமைப்புகள் 23 பேர் கொண்ட மீளாய்வுக் குழுவில் இணைக்கப்படாமை தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது இந்த ஊடகத் தேசிய கொள்கை உருவாக்கப்பட்டது. இக் கொள்கை உருவாக்கம் தொடர்பாக, உரிய முறையில் ஊடக அமைப்புகளுடன் பேச்சு நடத்தப்படவில்லை. அத்துடன் 2023 ஆம் ஆண்டு இக் கொள்கை தயாரிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு அது கைவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அந்தக் கொள்கையை சில திருத்தங்களுடன் மீளவும் ஆய்வுக்கு உட்படுத்தி பூர்த்தி செய்துள்ளது.

இருப்பினும், தேசிய ஊடகக் கொள்கை யுனெஸ்கோ ஊடக சுதந்திரக் கொள்கைகளுடன் இணங்கவில்லை என்பது தெரிகிறது. இது பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஊடகங்களின் சுதந்திரம் பற்றிய பெரும் கவலைகளை எழுப்புள்ளது.

பல நாடுகளில் பொதுச் சேவை ஊடகத்தை ஒழுங்குபடுத்துதல், ஊடக உரிமையில் வெளிப்படைத் தன்மையை அமுல்படுத்துதல் மற்றும் கலப்பு ஊடக உரிமையைக் கட்டுப்படுத்துதல் அதாவது அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் இரண்டையும் ஒரே நிறுவனம் வைத்திருக்கும் முறைமையை தேசிய ஊடகக் கொள்கை உரிய முறையில் கட்டுப்படுத்தவில்லை.

பன்முகத்தன்மை சுதந்திரமான பத்திரிகையை உறுதி செய்தல் போன்றவற்றுக்காக கலப்பு ஊடக உரிமை பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே இது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இலங்கையில் உள்ள அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் அநேகமானவை அரசியல் பின்னணி கொண்டவை. வேறு சில ஊடக நிறுவனங்கள் அரசியல் குடும்பங்களுக்குச் சொந்தமானவை. ஆகவே அரசியல் பின்னணி கொண்ட ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தக் கூடிய அளவுக்கு ஊடகத் தேசியக் கொள்கை அமையவில்லை என்பதை பகிரங்கமாகக் கண்டிக்கிறோம்.

ஊடகத் தேசிய கொள்கை பற்றி ஊடக அமைப்புகள் உள்ளிட்ட 21 செயற்பாட்டு அமைப்புகளுடன் உரையாடியதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருந்தார்.

ஊடக அமைப்புகள் கலந்துரையாடியதை மறுக்கவில்லை. ஆனால் ஊடக அமைப்புகளினால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. குறிப்பாக போர்க்காலத்திலும் 2009 இற்கு பின்னரான சூழலிலும் கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான ஊடக நிறுவனங்கள் பற்றி விசாரணை நடத்த சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றப்படவில்லை. மாறாக அது சட்டம் சார்ந்த விடயம் என்றும், ஊடகத் தேசிய கொள்கை நடைமுறைக்கு வந்த பின்னர் அதற்குரிய சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

அதேநேரம், ஊடகவியலாளர்கள் எந்த அடிப்படையில் வரையறுக்கப்படுகின்றனர் என்ற சரியான புரிதலும் ஊடகத் தேசிய கொள்கையில் இல்லை. 2023 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஊடக தேசிய கொள்கையை மீளாய்வு செய்து திருத்தம் மற்றும் புதிய விடயங்களை சேர்க்கும் நோக்கில் அநுர அரசாங்கம் உருவாக்கிய 23 பேர் கொண்ட குழுவில் வடக்கு கிழக்கை மையப்படுத்திய ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைக்கப்படவில்லை.

இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு ஊடக அமைப்பான உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அந்த 23 பேர் கொண்ட குழுவில் இணைக்கப்படவில்லை.

அதேவேளை ஒப்பாசாரத்துக்காக கொழும்பில் உள்ள அரசாங்கத் தகவல் திணைக்கள அதிகாரிகள் சிலர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவனியா மற்றும் மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களுக்கு நேரடியாக வருகை தந்து ஊடகத் தேசியக் கொள்கை தொடர்பாக விளக்கமளித்தனர்.

தமிழ் ஊடகத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் கவனத்தில் எடுக்கப்பட்டு அதற்கு ஏற்ப ஊடகத் தேசிய கொள்கை தயாரிக்கப்படவில்லை. அதேநேரம் அரசாங்க ஊடகங்களை சுயாதீனமாக செயற்படுத்தும் உரிய திட்டங்கள் ஊடக தேசிய கொள்கையில் இல்லை. அரசாங்கத்துக்குச் சாதகமான முறையில் அரச ஊடகங்கள் செயற்படுத்தப்படும் முறைமைகள் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றன.

அந்தவகையில், அரசாங்கம் உருவாக்கியுள்ள ஊடக தேசிய கொள்கையை ஏற்க முடியாது என்றும், ஊடக அமைப்புகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு புதிய ஊடகக் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் எனவும் யாழ் ஊடக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது.

The post அரசாங்கத்தின் ஊடகத் தேசிய கொள்கையில் குறைபாடுகள் – ஏற்க முடியாதென்கிறது யாழ். ஊடக அமையம் appeared first on Oruvan.com.

போதைப்பொருள் கடத்தல். மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் கைது, மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன!
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு போதைப் பொருட்களை கடத்திக் கொண்டு வந்த மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டுபிடிக்க முடியாத முறையில், போதைப் பொருட்களை கடத்திக் கொண்டு வந்து விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த நபர்களிடம் விசாரணை நடததிய பொலிஸார், போதைப் பொருட்களை கடத்திக் கொண்டு வந்த நபர்களையும் விற்பனை செய்தவரையும் கைது செய்துள்ளனர்.

மாசி கருவாடு சம்பல் போத்தலுக்குள் மறைத்து போதை மாத்திரைகளை கொழும்பில் இருந்து கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரணையின் போது பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு  பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கொழும்பில் உள்ள சில நபர்களை கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து போதை மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

The post போதைப்பொருள் கடத்தல். மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் கைது, மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன! appeared first on Oruvan.com.

இறைவரி திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு – ஆணையாளர் தகவல்
இலங்கை இறைவரி திணைக்களம், 2025ஆம் ஆண்டு அதிகளவான வருமானத்தை பெற்றுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.பி.இ. பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த 90 வருடத்தில் இது மாபெரும் அதிகரிப்பு என்றும் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2024/2025ஆம் ஆண்டு நிதியாண்டு மதிப்பீட்டின் பிரகாரம், வருமான வரி அறிக்கையை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களம் வரி செலுத்தும் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது எனவும், இதன் மூலம் மேலும் வருமானம் அதிகரிக்கும் எனவும் அவர் கூறினார்.

தாமதமின்றி ஒவ்வொரு பிஜைகளும் வரி வருமானத்தை முறையாக செலுத்தினால், இலங்கைத்தீவின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் உறுதுணையாக அமையும் எனவும் ஆணையாளர் கூறினார்.

அதேவேளை, வரி செலுத்தாத நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த தவனைக்குள் வரி செலுத்தத் தவறுவோருக்கு பல மடங்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்தாகவும் ஆனாலும் மீண்டும் ஒரு முறை ஞாபகமூட்டுவதாகவும் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

The post இறைவரி திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு – ஆணையாளர் தகவல் appeared first on Oruvan.com.

புதுடில்லி வாகன வெடிப்பு சம்பவம் – தமிழ் நாட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ் நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரத்தியேகமாக மேற்கொள்ளப்படுவதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

சென்னை நகரின் 12 பொலிஸ் பிரிவு மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களைக் கொண்ட பொலிஸ் குழுக்கள் முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகளை மேற்கொண்டு வருவதாக, த இந்து (thehindu) என்ற ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, தமிழ் நாட்டின் இராமநாதன் மாவட்டத்தில் உள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தில், தமிழக பொலிஸார் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் சென்னை, மதுரை போன்ற இடங்களிலும், பொலிஸார் மேலதிக பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதுடில்லி செங்கோட்டை அருகே திங்கட்கிமை மாலை வாகனம் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டதையடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இந்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளமைக்கு ஏற்ப இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

புதுடில்லி, சென்னை, மும்பாய் உள்ளிட்ட பிரதான சர்வதேச விமான நிலையங்களிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

The post புதுடில்லி வாகன வெடிப்பு சம்பவம் – தமிழ் நாட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு appeared first on Oruvan.com.

வடக்கு கிழக்கில் மாவீரர் துயிலும் இல்ல துப்பரவு பணிகள் ஆரம்பம்
மாவீரர் நாளை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தையும் சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள், பொது அமைப்புகள், பிரதேச மக்கள் இப் பணியில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துயிலும் இல்ல வளாகத்தில் தீபம் ஏற்றி துப்பரவு பணிகளை ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவடட அமைப்பாளர் எஸ்.தவபாலன் உட்பட்ட ஏற்பாட்டு குழுவினர், இளைஞர், பெண்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சுத்தம் செய்யப்பட்டு அதற்கு அருகில் உள்ள இடத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்கொண்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்திலும் மாவீரர் துயிலும் இல்லங்கள் சுத்தம் செய்யப்படுகின்றன. இளைஞர்கள் – பெண்கள் பலரும் இப் பணியில் ஈடுபடுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டு 27 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை தீபம் ஏற்றப்படும்.

The post வடக்கு கிழக்கில் மாவீரர் துயிலும் இல்ல துப்பரவு பணிகள் ஆரம்பம் appeared first on Oruvan.com.

அமெரிக்காவுக்கு கனிமங்கள் – அரிய மண் பொருட்கள் ஏற்றுமதி, சீனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் நிறுத்தம் நீடிப்பதைக் குறிக்கும் வகையில், அமெரிக்காவிற்கு முக்கியமான கனிமங்கள் மற்றும் அரிய மண் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான பல கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியுள்ளதாக மின்னிங் (mining) என்ற அவுஸ்திரேலிய ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இராணுவ வன்பொருள், குறைக்கடத்திகள் மற்றும் பிற உயர் தொழில்நுட்பத் தொழில்களில் பயன்படுத்தப்படும் முக்கியமான கனிமங்கள் மீதான சில ஏற்றுமதி கட்டுப்பாடுகளை ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைப்பதாக சீனாவின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தித் தளம் கூறியுள்ளது.

ஒக்டோபர் 9 ஆம் திகதி முதன்முதலில் விதிக்கப்பட்ட இடைநிறுத்தப்பட்ட கட்டுப்பாடுகளில், சில அரிய மண் கூறுகள், லித்தியம் பட்றிப் பொருட்கள் மற்றும் செயலாக்க தொழில்நுட்பங்கள் ஏற்றுமதிக்கான வரம்புகள் உள்ளடங்கும்.

ஒக்டோபர் 30 அன்று தென் கொரியாவின் புசானில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஏற்றுமதி தளர்வுகள் விதிக்கப்பட்டன.

பீஜிங், காலியம், ஜெர்மானியம், ஆண்டிமனி மற்றும் செயற்கை வைரங்கள் மற்றும் போரான் நைட்ரைடுகள் போன்ற உயர்தரப் பொருட்கள் என்று அழைக்கப்படும் பிற பொருட்களின் ஏற்றுமதி மீதான  தடைகளையும் நீக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கைகள், சீனா மீதான வோசிங்டனின் விரிவாக்கப்பட்ட குறை கடத்தி ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு பதிலடியாக பரவலாகக் காணப்பட்டன.

சீனா அத்தகைய பொருட்களை “இரட்டை-பயன்பாட்டு பொருட்கள்” என்று வகைப்படுத்துகிறது, அதாவது அவை பொதுமக்கள் மற்றும் இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

The post அமெரிக்காவுக்கு கனிமங்கள் – அரிய மண் பொருட்கள் ஏற்றுமதி, சீனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது appeared first on Oruvan.com.

ட்ரம்ப் பற்றிய திரிபுபடுத்தப்பட்ட செய்தி, பிபிசி பணிப்பாளர், நிறைவேற்று அதிகாரி பதவி விலகல்
பிரித்தானியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான பிபிசி செய்தி சேவையின் பணிப்பாளர் நாயகம் ரிம் டேவி மற்றும் செய்தி பிரிவு பிரதம நிறைவேற்று அதிகாரி டெபோரா டெர்னஸ் ஆகியோர் உடனடியாக பதவி விலகியுள்ளனர். டேவி கடந்த ஐந்து ஆண்டுகளாக பிபிசி செய்தி சேவையில் பணிபுரிந்தவர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்பாக திரிபுபடுத்தப்பட்ட செய்திகயைத வெளியிட்ட குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனால் இவர்கள் உடனடியாக பதவி வலிகியுள்ளனர்.

குறிப்பாக வழமையான காண்பிக்கப்படும் ஆவண காட்சி நிகழ்ச்சி ஒன்றில், நேயர்களுக்குத் தவறான தகவல்களை வழங்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு குற்றவாளி என்ற முறையில் தொகுத்து வெளியிட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ட்ரம்பின் இரண்டு வெவ்வேறு உரைகள் தொகுக்கப்பட்டு பிழையான முறையில் ட்ரம்ப் பற்றிய கருத்து நேயர்களிடம் திணிக்கப்பட்டிப்பதாக நிர்வாகம் கூறியுள்ளது.

உலக செய்தி சேவை நிறுவனமான பிபிசி ஊடக நிறுவனம், பக்க சார்பாக செய்திகளை வெளியிட்டது என குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்த அடிப்படையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவிருந்தது.

இந்த குற்றச்சாட்டுகளின் காரணமாக பிபிசி செய்தி சேவையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் செய்தி பிரிவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் தங்களது பதவிகளை விட்டு விலகி உள்ளனர்.

தவறு நடந்தால் பதவி விலக வேண்டும். பிபிசி நேர்மையான செய்தி நிறுவனம். ஆகவே குறித்த ஆவணக் காட்சியில் தவறு இருந்தாக கூறப்பட்டதால், அதற்குரிய பொறுப்பை ஏற்று, பதவி விலகுவதாக ரிம் டேவி தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கெப்பிடல் ஹில் பகுதியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாகவும், பிபிசி திரிபுபடுத்திய செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ட்ரம்ப் பற்றிய திரிபுபடுத்தப்பட்ட செய்தி, பிபிசி பணிப்பாளர், நிறைவேற்று அதிகாரி பதவி விலகல் appeared first on Oruvan.com.

பிணை முறி மோசடி, அர்ஜுன் மகேந்திரன் கைது செய்யப்படுவார். சர்வதேச பிடியாணை உத்தரவுக்கு ஏற்பாடு
2015 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அர்ஜுன் மகேந்திரன், பிணை முறி மோசடி குற்றச்சாட்டில் விரைவில் கைது செய்து இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள மகேந்திரன், முறைப்படி கைது செய்யப்பட்டு சட்ட நடவக்கை எடுப்பதற்கு உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சென்ற ஒகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தாக்கல் செய்த முறைப்பாட்டில், செப்டம்பர் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

ஆனாலும் அர்ஜுன் மகேந்திரன் இதுவரை முன்னிலையாகவில்லை. இதனால் அவரை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச பிடியாணையின் பிரகாரம் அவரை கைது செய்ய குற்றப் புலனாய்வு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேநேரம், அர்ஜுன் மகேந்திரன், இலங்கையில் இருந்து வெளியேற, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பணிப்பாளர்   நாயகம் ரங்க திசாநாயக்க, அனுமதித்தார் என்றும் அவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

The post பிணை முறி மோசடி, அர்ஜுன் மகேந்திரன் கைது செய்யப்படுவார். சர்வதேச பிடியாணை உத்தரவுக்கு ஏற்பாடு appeared first on Oruvan.com.

அமெரிக்க – ரசிய அணு ஆயுத பரிசோதனை விவகாரமும் இந்திய நிலைப்பாடும்
அணு ஆயுத பரிசோதனை தடை ஒப்பந்தத்தில் (Comprehensive Nuclear-Test-Ban Treaty – CTBT) கைச்சாத்திட்டுள்ள நிலையில், அமரிக்கா அணு ஆயுதப் பிரிசோதனையை நடத்தினால், ரசியாவும் அதனை செய்யும் என ரசிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளதாக அல்ஜசீரா (aljazeera) ஆங்கில செய்திச் சேவை இன்று வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் ஹங்கேரியில், உக்ரெயன் ரசிய போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்தை ஒன்று நடைபெற இருந்தது. பின்னர் அதனை ட்ரம்ப்  ரத்து செய்தார்.

அதற்கு ஒரு நாள் கழித்து இரண்டு பெரிய ரசிய எண்ணெய் நிறுவனங்கள் மீது தடைகளை விதித்தார். தற்போது அணு ஆயுதப் பரிசோனைக்கு தயாராகுமாறு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டுள்ளார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

2000 ஆம் ஆண்டில் இருந்து 2025 ஆம் ஆண்டு வரை அதாவது, 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், வட கொரியா தவிர எந்த நாடும் அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை.

வடகொரிய அணு ஆயுதப் பரிசோதனைகளை மேற்கொண்டபோது அமெரிக்கா கண்டித்திருந்தது. இதனால் பெரும் சர்சைகள் ஏற்பட்டிருந்தன.

இப் பின்புலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற நாள் முதல் வரி அறவீட்டு முறையில் எழுந்து பொருளாதார போர், ஐரோப்பிய – மேற்கு நாடுகள் மத்தியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியிருந்தன.

இப் பின்னணியில் அணு ஆயுத சோதனையை ஆரம்பிக்குமாறு டொனால்ட் ட்ரம் அமெரிக்க பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமை மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

ட்ரம்பின் இந்த உத்தரவையடுத்து ரசிய பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரெய் பெலோசோவ், “முழுமையான அணு சோதனைகளுக்குத் தயாராகுவது அவசியம்” என அறிவித்துள்ளார்.

இதனால் புவிசார் அரசியல் – இராணுவ சமநிலைப் போட்டிகள் ஆரம்பித்துள்ளன என்று கூறலாம்.

1991-ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் இருந்து காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த அணு ஆயுத சோதனையை மீண்டும் ஆரம்பிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ரசிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த உத்தரைவை பிறப்பித்துள்ளார் என்றும் அதன் பிரகாரமே  ரசிய பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரெய் பெலோசோவ் அணு ஆயுதப் பரிசோதனை பற்றிய அறிவிப்பை வெளியி்டுள்ளார் எனவும் ரசிய ஊடகங்கள் கூறுகின்றன.

ரசியாவின் நொவாயயா சிமிலியா (Novaya Zemlya) மாநிலத்தில் உள்ள ஆர்க்டிக் சோதனை மையம், மிகக் குறுகிய காலத்தில் சோதனைகளை நடத்த தயாராகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அணு ஆயுத பரிசோதனை ஆரம்பிக்கப்பட முன்னர் தேவையான தகவல்களை சேகரித்து, ரசிய பாதுகாப்பு சபை பரிசீலித்து, பொருத்தமான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரெய் பெலோசோவ்  உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம் ரசியாவின் நட்பு நாடான சீனா இந்த விவகாரத்தில் அமைமதியாக உள்ளது. ரசியா அணு ஆயுத பரிசோதனைகளை ஆரம்பித்தால், சீனா அதற்கு ஒத்தழைப்பு வழங்கக் கூடிய வாய்ப்பு உண்டு.

அரசியல் – பொருளாதார மற்றும் இராணுவ ரீதியான உறவுகள் – பரிமாற்றங்களில் சீன- ரசிய உறவு பலமடைந்து வரும் நிலையில், அணு ஆயுதப் பரிசோனை விவகாரம் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தலாம்.

அதேநேரம் அமெரிக்கா – ரசிய நாடுகளுடன் சமாந்தரமாக உறவை பேணி வரும் இந்தியா இந்த விவகாரத்தில் தொடர்ந்து இரட்டை நிலைப்பாட்டை பேணுமா என்ற கேள்விகள் எழுகின்றன.

சர்வதேச இராஜதந்திர உறவு முறையில் அணிசேராக் கொள்கை என்ற நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்தும் பின்பற்றுவதை அமெரிக்கா அனுமதிக்குமா என்பதும் கேள்வியே.

ஏனெனில் இந்தோ – பசுபிக் பிராந்திய விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான இராணுவ அணுகுமுறைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பு அமெரிக்காவுக்கு அவசியம் தேவைப்படுகின்றது.

அதேபோன்று, அமெரிக்க ஒத்துழைப்பு இல்லாமல் இந்தோ – பசுபிக் விவகாரத்தை இந்தியா கையாள்வதும் கடினமானது.

ஆகவே அமெரிக்க – ரசிய நாடுகளின் ஆணு ஆயுதப் பரிசோதனைகள் இந்திய இராஜதந்திரத்துக்கு ஒரு பரீட்சையாகவே இருக்கும் என்று பொருள் கொள்ள முடியும்.

The post அமெரிக்க – ரசிய அணு ஆயுத பரிசோதனை விவகாரமும் இந்திய நிலைப்பாடும் appeared first on Oruvan.com.

பிலிப்பைன்ஸ் சூறாவளி பலர் உயிரிழப்பு, வெள்ளத்தினால் நிவாரணப் பணிகள் தாமதம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்மேகி (Kalmaegi) என்ற சூறாவளியினால் இதுவரை 60 இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். தொடராகப் பெய்த கடும் மழையினால் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் வீடுகள் – கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் நியூஸ்வீக் (newsweek) என்ற ஆங்கில செய்தித் தளம் தெரிவித்துள்ளது.

இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். பிரதேசத்தில் இருந்து சுமார் 200,000 இற்கும் மேற்பட்ட மக்கள் அசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஆனாலும் சேத விபரங்கள் இன்னமும் மதிப்பிடப்படவில்லை என நியூஸ்வீக் செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

கன மழை தொடருவதால், மீட்புப் பணியாளர்கள் உதவி வழங்குவதற்கு செல்ல முடியாது என்றும், ஆனாலும் மழை ஓயும் வரை பணியாளர்கள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் செல்வதற்காக காத்திருக்கிறார்கள் எனவும் சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் துணை நிர்வாகி ரஃபேலிட்டோ அலெஜான்ட்ரோ ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் சுற்றுலா மையமான செபுவின் பகுதிக்கு தெற்கே உள்ள மின்டானாவ் தீவில் நிவாரணப் பணிகளுக்காகச் சென்ற  ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதால்,  ஆறு இராணு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

செபுன் பிரதேசத்தில் 13 பேரை காணவில்லை. மேலும் பலர் வெள்ளத்தில் சிக்குண்டிருக்கலாம். குறிப்பாக இப் பிரதேசத்தில் சுற்றுலா பயணிகள் தங்கியிருப்பதாகவும், அவர்களை மீட்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 இற்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பல வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பல இடங்களில் மின்சாரம், தொலைத் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் 180 இற்கும் அதிகமான விமான சேவைகள் காலவரையறையின்றி இரத்துச் செய்யப்படடுள்ளன.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் வடக்கு செபுவில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு டசின் கணக்கானக்கில் மக்கள் உயிரிழந்து ஆயிரக்கனக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். தற்போது, டினோ என்று அழைக்கப்படும் கல்மேகி சூறாவளியினால் மக்கள் மேலும் பேரழிவை சந்தித்துள்ளனர்.

இதேவேளை, இச் சூறாவளி தொடர்பாக வியட்நாம் அரசாங்கம் தமது நாட்டு மக்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post பிலிப்பைன்ஸ் சூறாவளி பலர் உயிரிழப்பு, வெள்ளத்தினால் நிவாரணப் பணிகள் தாமதம் appeared first on Oruvan.com.