Kanooshiya Pushpakumar, Author at Oruvan.com

முன்னாள் ஜனாதிபதி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை
மியான்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இராணுவம் உட்பட மருத்துவக் குழுவை அங்கு அனுப்புமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மியான்மருக்கும் இலங்கைக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதாகவும், அந்த நாட்டில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்க மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்களை அனுப்புமாறு அரசாங்கத்திற்கு முன்மொழிவதாகவும் அவர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த அறிக்கையில்,

“2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ​​நாங்கள் இராணுவக் குழுவை அனுப்பினோம்.

இந்தியாவிற்குப் பிறகு இலங்கை இரண்டாவது பெரிய நன்கொடையாளராக இருந்தது.

இன்று, இந்தியா, தாய்லாந்து, மலேசியா, சீனா மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள அவுஸ்திரேலியா கூட மியான்மருக்கு உதவிகளை அனுப்பியுள்ளன.

இராணுவ மருத்துவப் படையைச் சேர்ந்த மருத்துவர்கள் உட்பட ஒரு குழுவை உடனடியாக மியான்மருக்கு அனுப்பி, அவர்களுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி, மியான்மரில் ஒரு தற்காலிக மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்பதே எனது முன்மொழிவு.

அதுமட்டுமல்லாமல், கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் அவர்களுக்குத் தேவையான மருந்துகளைச் சேகரித்து அங்கு அனுப்ப முடியும்.

கடந்த ஆண்டு, காசாவிற்கு இலங்கையிலிருந்து ஒரு மில்லியன் டொலர்களை நான் வழங்கினேன்.

எனவே, இந்த விடயத்தில் நாமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் அரசாங்கத்திற்கு முன்மொழிகிறேன்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post முன்னாள் ஜனாதிபதி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை appeared first on Oruvan.com.

300 ஐ தாண்டிய தேர்தல் சட்ட மீறல்கள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக நேற்று மாலை 4.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 68 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, சட்ட மீறல்கள் தொடர்பாக 54 முறைப்பாடுகளும், ஏனைய 14 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த 20 ஆம் திகதி முதல் நேற்று வரை பதிவான மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 302 ஆகும்.

வன்முறைச் செயல்கள் தொடர்பான 02 முறைப்பாடுகள், சட்ட மீறல்கள் தொடர்பான 274 முறைப்பாடுகள் மற்றும் 26 ஏனைய முறைப்பாடுகள் இதில் உள்ளடங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

The post 300 ஐ தாண்டிய தேர்தல் சட்ட மீறல்கள் appeared first on Oruvan.com.

தாய்லாந்து செல்லவுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய
ஆறாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய தாய்லாந்து செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த உச்சிமாநாடு ஏப்ரல் 3 மற்றும் 4ஆம் திகதிகளில் பாங்கோக்கின் உறுப்பு நாடுகளின் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறும்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

இதன்போது வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர கலந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளார்.

The post தாய்லாந்து செல்லவுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய appeared first on Oruvan.com.

நாளை முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
நாடளாவிய ரீதியில் சில பகுதிகளுக்கு நாளை முதல் (01) எதிர்வரும் சில தினங்களுக்கு மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேற்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 10 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவும்.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

The post நாளை முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் appeared first on Oruvan.com.

பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் பலி
கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவர் அந்த ஹோட்டலில் ஒரு அறையில் தங்கியிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த நபர் உயிரிழப்பதற்கு முன்னர் எழுதிய ஒரு கடிதமும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில், “மன்னிக்கவும், அம்மா, நான் மிகவும் சோர்ந்து விட்டேன் .. நான் எப்போதும் மனதால் வருந்திக் கொண்டிருக்கிறேன்…” என்று எழுதப்பட்டுள்ளது.

The post பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் பலி appeared first on Oruvan.com.

தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் பதிவு
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அதன்படி, நேற்று (30) களுத்துறை பொலிஸ் பிரிவில் அகலவத்த பொலிஸ் பொலிஸ் நிலையத்தில் வாய்மொழி மிரட்டலுக்குட்படுத்தி தாக்குதலுக்கு முற்பட்டமை தொடர்பில் முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் சட்டங்களை மீறல்கள் தொடர்பில் 5 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

குறித்த முறைப்பாடுகள் தலாதுஒய, தணமல்வில, அலுத்கம, மாத்தளை மற்றும் கலேவெல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பதிவாகியுள்ளன.

The post தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் பதிவு appeared first on Oruvan.com.

குறுஞ்செய்திகள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்வதை நிறுத்துமாறு அறிவுறுத்தல்
குறுஞ்செய்திகள் மற்றும் குரல் அஞ்சல்கள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்வதை நிறுத்துமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மக்களின் தனியுரிமையை மீறும் வகையில் குறுஞ்செய்திகள் மற்றும் குரல் பதிவுகளைப் பயன்படுத்தி தொலைபேசிகளுக்கு அனுப்பப்படும் அரசியல் பிரசாரங்களை நிறுத்துமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்படும் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிந்தக குலரத்ன சிங்கள ஊடகமொன்றிடம் கருத்து தெரிவித்தார்.

இதேவேளை, அமைதியான காலத்தில் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் இணைப்புகளை நீக்குவது குறித்து சமூக ஊடக தளங்களான மெட்டா, டிக்டோக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது குறித்த நிறுவனங்கள் ஆதரவளித்தது போலவே, உள்ளூராட்சித் தேர்தல்களின் போதும் ஆதரவை வழங்கும் என்று அவர் கூறினார்.

மேலும் , சமூக ஊடகங்களில் தேர்தலை இலக்காகக் கொண்ட தவறான தகவல்கள், பிரசாரம் மற்றும் வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்த நாட்டின் தொலைபேசி நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுடன் ஒரு வழிமுறை நிறுவப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

The post குறுஞ்செய்திகள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்வதை நிறுத்துமாறு அறிவுறுத்தல் appeared first on Oruvan.com.

முன்னாள் அமைச்சரின் செயலாளர் துப்பாக்கியுடன் கைது
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் செயலாளர் எனக் கூறிக்கொள்ளும் ஒருவர் ஓட்டிச் சென்ற சொகுசு காரில் இருந்து 9 மிமீ வகை துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர்.

உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததற்காகவும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காகவும் காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அங்கொடை, புத்கமுவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

The post முன்னாள் அமைச்சரின் செயலாளர் துப்பாக்கியுடன் கைது appeared first on Oruvan.com.

நாட்டில் மதுபான உற்பத்தி அதிகரிப்பு
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொது நிதிக் குழுவின் அறிக்கையில், நாட்டில் மதுபான உற்பத்தி இவ்வாண்டின் முதல் பாதியில், முந்தைய இரு ஆண்டுகளுடன் (2023- 2024) ஒப்பிடும்போது 22 வீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் காணப்படாத ஒரு போக்கைக் காட்டும் வகையில், மதுபான உற்பத்தி அதிகரித்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மது வரிகள் காரணமாக அரசாங்க வருவாயும் 23 வீதம் அதிகரித்துள்ளது. எனினும், 2022 ஆம் ஆண்டில் 26 மில்லியன் லிட்டராக இருந்த நாட்டில் மதுபான நுகர்வு, 2024ஆம் ஆண்டில் 19.31 மில்லியன் லிட்டராகக் குறைந்துள்ளது.

மதுபான விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடியே இதற்குக் காரணங்களாக இருந்தன. மது வரி அதிகரிப்பால் சட்டவிரோத மதுபான நுகர்வு மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் குழுவின் அறிக்கை கூறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் 30-35 மில்லியன் லிட்டர் மதுபானம் சட்டவிரோதமாக நுகரப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post நாட்டில் மதுபான உற்பத்தி அதிகரிப்பு appeared first on Oruvan.com.

இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாதா? கேள்வியெழுப்பும் வசந்த முதலிகே
சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதார பட்டதாரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.

தனது முகநூல் கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இன்று (28) அதிகாலை 2:00 மணி முதல் 2:30 வரை பொலிஸாரின் தாக்குதல் நடந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பாளர் உட்பட 27 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுகாதார பட்டதாரிகள் மற்றும் மாணவர்கள் பல கோரிக்கைகளின் அடிப்படையில் முந்தைய அரசாங்கங்களுடனும் தற்போதைய அரசாங்கத்துடனும் கலந்துரையாடல்களை நடத்தினர்.

அரசாங்கங்கள் தீர்வுகளை வழங்காமல் தாமதப்படுத்தியதன் காரணமாக, சுகாதார அமைச்சுக்கு முன்னால் உள்ள பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக வசந்த முதலிகே சுட்டிக்காட்டுகிறார்.

இந்த சம்பவம் இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாதா என்ற பிரச்சினையை எழுப்புவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.

போராட்டம் நடத்துவது பற்றி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சொல்லத் தேவையில்லை என்றும், தற்போதைய ஆட்சியாளர்கள் பல சந்தர்ப்பங்களில் போராட்டம் நடத்தியுள்ளனர் என்றும் வசந்த முதலிகே வலியுறுத்தினார்.

The post இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாதா? கேள்வியெழுப்பும் வசந்த முதலிகே appeared first on Oruvan.com.