Dharshani S, Author at Oruvan.com

அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கும் ஆற்றல் அரசாங்கத்திடம் உள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பிரச்சினைகளுக்கும் எதிர்காலத்தில் தீர்வு கிடைக்கும் என்பதை அவர்கள் அறிவார்கள் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார் .

தற்போது பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பயிற்சிக்கு பிந்தைய வைத்தியர்களுக்கான நியமனங்கள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும்  இந்த நியமனங்களுக்காக 453 வைத்தியர்களில் 435 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அமைச்சர்  நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார் .

தற்போது இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அது வெளியிடப்படும் என்றும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் இந்த வைத்தியர்களுக்கான முதற்கட்ட நியமனங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர்  நளிந்த ஜயதிஸ்ஸ   மேலும் தெரிவித்துள்ளார் .

The post அனைத்துப் பிரச்சினைகளையும்  தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் appeared first on Oruvan.com.

இலங்கைக்கு சீனா முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்க இணக்கம்
இலங்கையில் நிலவும் பாரிய எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், சீனா முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்க முன்வந்துள்ளது.

அத்துடன் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹொங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்து இந்த ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேநேரம்   சீனாவிலிருந்து முதலாவது எரிபொருள் கப்பல் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ‘சினோபெக்’ நிறுவனத்தின் வழமையான இருப்புகளுக்கு மேலதிகமானது என தெரிவிக்கப்படுகிறது .

எரிபொருள், நிலக்கரி, உரம் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ள  ரஷ்யாவுடன் அரசாங்கத்துக்கு  இடையிலான நேரடி ஒப்பந்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான  மேலதிக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த மாதம் ரஷ்யாவுக்கு விஜயம்  மேற்கொள்ளவுள்ளார்.

இதேவேளை  ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், அங்கிருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதியை வழங்குமாறு இலங்கை அமெரிக்காவிடம் கோரியுள்ளது.

அமெரிக்க விசேட தூதுவர் செர்ஜியோ கோர் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்தபோது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய 30 நாள் சலுகைக்காலம் ஏப்ரல் 11 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

எனினும், குறைந்தது மூன்று மாத கால அனுமதியாவது கிடைத்தால் மாத்திரமே  ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தைத் தொடர முடியும் என அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது.

The post இலங்கைக்கு  சீனா முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்க இணக்கம் appeared first on Oruvan.com.

அமெரிக்க போர் விமானி மீட்பு
ஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானத்தில் பயணித்து மாயமாகியிருந்த விமானி மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

கர்னல் அந்தஸ்திலான விமானப்படை அதிகாரியே துணிச்சலான தேடுதல் நடவடிக்கைக்குப் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை மீட்க முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கை இராணுவ வரலாற்றின் மிக முக்கியமான வெற்றியென ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மேற்படி விமானத்தில் இருந்த மற்றுமொரு வீரரும் மீட்கப்பட்ட நிலையில், ஒரே போர்க்களத்தில் இரு வீரர்கள் தனித்தனியாக மீட்கப்பட்டது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகின்றது.

இந்த மீட்பு நடவடிக்கையின் போது இரு தரப்பிற்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டைகள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கின்றது . கடந்த வெள்ளிக்கிழமை F-15E Strike Eagle வகை போர் விமானம் விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து, அமெரிக்கா மிக விரைவான தேடுதல் மற்றும் மீட்புப் பணியைத் தொடங்கியது.

இதேநேரம் எதிரி நாட்டு விமானியை பிடித்து ஒப்படைப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என ஈரான் அறிவித்திருந்தது.

The post அமெரிக்க போர் விமானி மீட்பு appeared first on Oruvan.com.

உலகை ஆளும் பல தலைவர்கள் சேவகர்களாக இல்லை
இன்று உலகை ஆளும் பல தலைவர்கள் சேவகர்களாக இல்லாமல், அதிகாரத்தை விரும்புபவர்களாகவும், சுயநலம் கொண்டவர்களாகவும் இருப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சென். லூசியஸ் தேவாலயத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனையின் போது கொழும்பு பேராயர் இதனை குறிப்பிட்டுள்ளார் .

கிறிஸ்தவம் என்பது வெறும் சடங்குகளோ அல்லது போதகர்களால் உலகிற்குச் சொல்லப்படும் பிரசாரமோ அல்ல. அது அன்பினால் நிறைந்த ஒரு உன்னதமான வாழ்க்கை முறை எனவும் தெரிவித்துள்ளார் ..

கிறிஸ்து வாழ்ந்து காட்டிய நெறி என்பது அன்பின் சேவகனாக இருப்பதாகும் எனவும் இறைவனுக்கு முன்பாகவும், சக மனிதர்களுக்கு முன்பாகவும் நேர்மையாகவும் நீதியோடும் வாழ்வதே உண்மையான ஆன்மீகம் எனவும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார் .

ஒரு தலைவன் என்பவன் அதிகாரத்தைச் செலுத்துபவன் அல்ல, அவன் ஒரு சேவகனாக இருக்க வேண்டும் என்பதே கிறிஸ்துவின் போதனையாகும். துரதிர்ஷ்டவசமாக, இன்று உலகை ஆளும் பல தலைவர்கள் சேவகர்களாக இல்லாமல், அதிகாரத்தை விரும்புபவர்களாகவும், சுயநலம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

இத்தகைய தலைவர்களின் சிந்தனையில் அமைதியை விதைக்க தாம் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

The post உலகை ஆளும் பல தலைவர்கள் சேவகர்களாக இல்லை appeared first on Oruvan.com.

ஈரான் இராணுவத் தளபதிகள் கொலை செய்யப்பட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு
டெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில், ஈரானை தூரநோக்கற்ற முறையில் வழிநடத்திய பல இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைத்தளத்திலேயே டொனால்ட் டிரம்ப் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

டெஹ்ரான் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களில் மேலும் பல இலக்குகள் அழிக்கப்பட்டதாகவும் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார் .

உடன்படிக்கைகளுக்கு வருவதற்கு அல்லது ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கு டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு வழங்கிய 48 மணிநேரக் கால அவகாசம் முடிவடைவதற்கு முன்னரே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

எவ்வாறாயினும், இந்தத் தாக்குதல் தொடர்பில் ஈரான் அரசாங்கம் இதுவரை எவ்வித உறுதிப்படுத்தலையும் அல்லது மறுப்பையும் வெளியிடவில்லை.

The post ஈரான் இராணுவத் தளபதிகள் கொலை செய்யப்பட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு appeared first on Oruvan.com.

இன்று முதல் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கிறது
சூரியனின் தோற்ற வடதிசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, இன்று முதல் ஏப்ரல் 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இன்று நண்பகல் 12.13 இற்கு தொடந்துவ, ரத்கம, யக்கலமுல்ல, அக்குரஸ்ஸ, முல்கிரிகல, ரன்ன, கலமட்டிய மற்றும் உஸ்ஸங்கொட ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

The post இன்று முதல் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கிறது appeared first on Oruvan.com.

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் முன்னெடுக்கப்படுகிறது
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

அரசியல் தலையீடுகளின் அடிப்படையில் வைத்தியர்களின் இடமாற்றங்களை முன்னெடுப்பதை நிறுத்துதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்தது.

இன்று காலை 8.00 மணி முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பை நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முன்னெடுக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இருப்பினும், மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை, விசேட சிறுநீரக அலகுகள், முப்படை வைத்தியசாலைகள் மற்றும் தேசிய மனநல நிறுவனம் ஆகியவற்றில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படாது என அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.

இன்று கூடவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக் கூட்டத்தில், ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் மேலதிக தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .

The post வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் முன்னெடுக்கப்படுகிறது appeared first on Oruvan.com.

அதிக வெப்பநிலை தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை
நாளை மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது .

இதேநேரம் நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புறச் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் உடலில் சோர்வு நிலையை ஏற்படுத்தக்கூடும் எனத் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதால், உடலில் நீர்ச்சத்து குறைவடைதல் மற்றும் உப்பகற்றப்படுதல் காரணமாக தசைப்பிடிப்பு ஏற்படக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதனால் தாகம் ஏற்படாவிட்டாலும் அடிக்கடி போதியளவு நீர் அருந்தவும், முடிந்தவரை நிழலான இடங்களில் தங்கியிருத்தல் மற்றும் அதிக கடினமான வேலைகளைத் தவிர்க்கவும் பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் .

மென்மையான, வெளிர் நிறத்திலான பருத்தி ஆடைகளை அணியவும், வீட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

The post அதிக வெப்பநிலை தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

உலகின் மிக அதிக விலையுயர்ந்த வீட்டுச் சந்தை பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில்
உலகின் மிகக் குறைந்த கட்டுப்படியாகக்கூடிய வீட்டுச் சந்தைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக தி எக்கோனமிஸ்ட் ( The Economist)  இதழின் புதிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆசியா முழுவதும் அதிகரித்து வரும் வீட்டுவசதி நெருக்கடி தொடர்பில்  இந்த ஆய்வு விரிவாக விளக்கியுள்ளது.

வேகமான நகரமயமாக்கல் மற்றும் குறைந்த விலையிலான வீடுகளுக்கு நிலவும் கடும் பற்றாக்குறை ஆகியவையே இந்த நிலைக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

மில்லியன் கணக்கான மக்கள் தரமற்ற வீடுகளில் வசித்து வரும் நிலையில், வீடுகளின் அதீத விலை உயர்வு மக்களின் பொருளாதார வளர்ச்சியைத் தடுப்பதுடன், நகரங்களை நோக்கிய இடப்பெயர்ச்சியையும் குறைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பான மற்றும் கட்டுப்படியாகக்கூடிய விலையில் வீடுகள் கிடைப்பதை உறுதி செய்வது பிராந்திய அளவில் பல நன்மைகளைத் தரும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

முறையான வீட்டுவசதி உற்பத்தித்திறனை அதிகரிக்கும் எனவும்  இது மாணவர்களின் பாடசாலை வருகையை அதிகரிப்பதுடன், ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதாரச் சூழலில், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்கள் சொந்தமாக  வீட்டைக் கொள்வனவு செய்வது எட்டாக்கனியாக மாறியுள்ளதை இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

The post உலகின் மிக அதிக விலையுயர்ந்த வீட்டுச் சந்தை பட்டியலில்  இலங்கை இரண்டாவது இடத்தில் appeared first on Oruvan.com.

இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொ​ருள் கப்பல் இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்றித் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எக்ஸ் கணக்கில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு மோதலினால் இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் விநியோகத் தடைகள் தொடர்பில் சில நாள்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினேன் எனவும்

இந்தியாவின் விரைவான ஆதரவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் .

நேற்று 38,ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருள் கொழும்பை வந்தடைந்தது. இதனை கிடைப்பதற்கு ஒருங்கிணைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் நன்றிகள் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

The post இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு appeared first on Oruvan.com.