பாட்டாளி மக்கள் கட்சியுடன் த.வெ.க. கூட்டணி பேச்சுவார்த்தை

பாட்டாளி மக்கள் கட்சியுடன் த.வெ.க. கூட்டணி பேச்சுவார்த்தை

பா.ம.க.வுடன் த.வெ.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பா.ம.க. தலைவர் அன்புமணி தரப்புடன் த.வெ.க. தரப்பில் கட்சியின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி கலந்துரையாடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

2016 ஆம் ஆண்டில் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என பா.ம.க.விற்கு ஜான் ஆரோக்கியசாமி தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து பணியாற்றி உள்ளார்.

தற்போது த.வெ.க. கட்சியின் அரசியல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி பா.ம.க, தே.மு.தி.க.வை இலக்கு வைத்து கூட்டணி காய்களை நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி த.வெ.க. தலைமையில் கூட்டணி அமைப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்த போதிலும். 07 மாதங்களாகியும் எந்த கட்சியும் த.வெ.க.வுடன் கூட்டணியை உறுதி செய்யவில்லை.

ஒரு சதவீதம் வாக்கு வங்கி உள்ள கட்சிகள் கூட த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை. எனவே தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளுக்கு மாற்றாக பா.ம.க.வை இணைத்து கூட்டணி அமைக்க த.வெ.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

பா.ம.க.வும் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை உறுதி செய்யாத நிலையில், த.வெ.க.உடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This